3 Things You Should Know about 2 Peter
2 பேதுருவிலிருந்து அறிய வேண்டிய மூன்று அடிப்படை காரியங்கள்
06-03-2025
3 Things You Should Know about Obadiah
ஒபதியா புத்தகத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 அடிப்படை காரியங்கள்
13-03-2025
3 Things You Should Know about 2 Peter
2 பேதுருவிலிருந்து அறிய வேண்டிய மூன்று அடிப்படை காரியங்கள்
06-03-2025
3 Things You Should Know about Obadiah
ஒபதியா புத்தகத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 அடிப்படை காரியங்கள்
13-03-2025

நாகூம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

3 Things about Nahum

டேனியேல் டிம்மர்

நாகூம் புத்தகம் வாசிப்பதற்கு சற்று கடினமான ஒன்றாக இருக்கும். அசீரியா மீதான தேவனின் நியாயத்தீர்ப்பு, பாவம் வெற்றிப்பெற தேவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என்பதை கூறினாலும், நினிவேயின் வீழ்ச்சியின் மீதான இப்புத்தகத்தின் கொண்டாட்டத்தையும் அல்லது தொடர்ச்சியான தேவனின் தண்டனையின் மீது செலுத்தும் கவனம் சுவிசேஷத்துடன் எவ்வாறு ஒத்துப் போகிறது என்பதை புரிந்து கொள்வது கடினமான ஒன்றாக இருக்கலாம்.  வாசகர்கள் பின்வரும் மூன்று காரியங்களை மனதில் வைத்துக்கொண்டால் , இதுபோன்ற பல வியாக்கின பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

1.நாகூம் புத்தகத்தின் செய்திக்கான சூழலை சுவிசேஷம் ஏற்படுத்துகிறது.

முதல் பகுதியான நாகூம் 1:2-8, நிச்சயமான ஓர் எதிர்மறை தொனியை கொண்டுள்ளது. அசீரியர்கள் மட்டுமல்லாது இப்பகுதியில் குறிப்பிடப்படாத அனைத்து மனிதர்களும் தேவனின் பூரண நீதிக்கு முன்பாக நிற்கிறார்கள் என்பதை நாகூம் கூறுகிறது (நாகூம் 1:2-3, 5-6,8). அதேபோல், தமது இரக்கத்துக்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களுக்கு, அதே நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க அடைக்கலத்தை உண்டாக்கும் “இக்கட்டு நாளிலே அரணாண கோட்டை” யாக அதே தேவன் இருக்கிறார் என்பது மெய்யாகவே ஓர் நற்செய்தியாகும் (நாகூம் 1:7).

இப்புத்தகத்தின் ஆரம்பமாக இந்த செய்தி இருக்கிறபடியால், பின்வரும் மற்ற பகுதிகளை விளக்கப்படுததும் ஓர் திறவுகோலாக இது உள்ளது. யூதாவின் கடந்தகால பாவங்கள், அவர்களது உபத்திரவங்களுக்கான தேவனின் கிருபையுள்ள முடிவு (1:12), அசீரியா மீதான நியாயத்தீர்ப்பின் கடுங்கோபம் இவையனைத்தும், தேவனின் இரு செயல்களான இரட்சிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றின் முன்னடையாளங்களாக உள்ளது. மேலும், ஏறத்தாழ நாகூமுக்கு நூற்றுக்கும் குறைந்த ஆண்டுகளுக்கு முன், இஸ்ரவேலின் வடபகுதி மற்றும் கிழக்கு பகுதிகள் மீது அசீரியாவின் தொடர்ச்சியான ஆதிக்கம் இருப்பினும், இதற்கிடையில் தேவனின் இடையீடு ஆதிக்கத்தின் மீதான அவர்களின் நம்பிக்கைகளும், அவர்களுடைய தேவர்கள்தான் வெற்றியை கொடுத்தார்கள் என்பதை பொய்யாக்குகிறது. 

2.அசீரியா தேவனின் பிரதான எதிரி அல்ல.

நாகூம் அசீரியாவை மிக குறிப்பாக அதன் தலைநகரான நினிவேவை கடுமையாக நியாயந்தீர்த்தாலும், பெரும்பான்மையான அசீரியர்கள் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை, மற்றும் இதன் குடிமக்களில் சிலர் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர்களாக இருந்தனர். உண்மையில் இப்புத்தகம் அசீரிய ராஜாக்கள் மீதும் அதன் படைகள் மீதும் மற்றும் தங்களது சுய பெருமைகளுக்காக மக்களை ஒடுக்கும் நபர்கள் மீதும் ஒரு நிலையான கவனம் செலுத்துகிறது (1:11,14),  மற்றும் சீக்கிரமாக தேவனின் நியாயத்தீர்ப்பு அவர்கள் மீது வரும் என்பதையும் காண்பிக்கிறது. (681-669 கிமு) ல் ஆட்சிபுரிந்த “இவ்வுலகத்திற்கும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் நான் ராஜா” என்று தன்னை கருதி, மர்துக் மற்றும் நபு போன்ற பொய்யான தேவர்களை நம்பியிருந்த எசரதன் போன்ற ராஜாக்களுக்கு, தேவன் சொல்கிறார் “இனி உன் பேருக்கு வித்து விதைக்கப்படுவதில்லை” (1:14). தேவன் அப்படியே செய்கிறார். அசீரியா ராஜ்யத்துக்கு எதிரான தேவனின் நீதியான பழிவாங்கள், வெளிப்படுத்தல் புத்தகத்தின் “பாபிலோன்” க்கு எதிரான அவரது தீர்ப்பின் முன்னறிவிப்பாகும், இது ரோம் மட்டுமல்ல, அதற்கு முன் பாபிலோன் மற்றும் நினிவேயையும், அதற்கு பிறகு கொடுமைகளினாலும் பொருளாசைகளினால் நிறைந்து தங்களை மேன்மைப்படுத்தி தேவனை நிராகரிக்கும் அனைவருக்குமான எச்சரிப்பாக உள்ளது (வெளி 17-18).

3.தேவன் தனது அனைத்து சத்துருக்களையும் மேற்கொண்டு தனது மக்களை முழுவதும் மீட்டுக்கொள்வார்.

பாவிகளை இரட்சிப்பதற்கு தேவன் இலவசமாக தனது கிருபையின் மூலம் திட்டம்பண்ணவில்லையென்றால், அவரது சத்துருக்களை அழிக்கும் அழிவானது அனைவரையும் சாபத்துக்கும் மரணத்துக்கும் அனுப்பிவிடும் (ரோமர் 5:12-14). ஆச்சரியமாக, தேவனின் கிருபையானது இவ்வுலகில் பல ஆண்டுகளுக்கு முன் அசீரியா ராஜ்யபாரத்தின் மீதோ அல்லது தற்காலத்தில் தேவனுக்கு எதிராக கலகம் செய்பவர்கள் மீதோ அவரின் கிருபை செயலாற்றுகிறது.

பாவத்தின் வல்லமையின் வெளிச்சத்தில் பார்க்கும்போது, நியாயத்தீர்ப்பாயிருந்தாலும், இரட்சிப்பாக இருந்தாலும் அவைகள் மகிழ்ச்சிக்குரிய காரணங்களாகும். பொல்லாதவர்களும் அதை நடப்பிப்பவர்களும் விழுகையில், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியான முறையில் மகிழுவார்கள் (நாகூம் 3:19, வெளி 19:1-5). அதேபோல், தேவனின் இரட்சிப்பை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டவர்கள் அவர்கள் மீதான தேவனின் கிருபையையும் இரக்கத்தையும் கொண்டாடி மகிழ்ந்து தேவனின் இரட்சிப்பின் திட்டங்கள் முழுமையாக நிறைவேறுவதை நோக்கி காத்திருப்பார்கள் (1:15,2:2).

இந்த கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் விசுவாசிகள் தேவனின் வாக்குத்தத்தங்களில் நிலைத்திருக்கவும் தேவனின் வார்த்தையின் மீதான இவ்வுலகின் அநேக முரண்பாடுகளை நிராகரிக்கவும் விசுவாசிகளை நாகூம் புத்தகம் அழைக்கிறது. தன்னைத்தான் உயர்த்தி, சுய அழிவுக்கு நேராக சென்றுக்கொண்டிருக்கும் நினிவேயின விக்கிர ஆளுமையின் தன்மையை நாகூம் காட்டுவது போல், தேவனை பற்றிய உள்ளார்ந்த அறிவு இல்லாமல் சுயாமகவே பூரண மகிழ்ச்சியை அடைய முயற்சிக்கும் மனிதனை அவனது வாழ்க்கைக்கு அவன்தான் அதிபதி என்று கூறி தேவனின் மகிமையை பறிக்கும் தனி மனிதன், குழு மற்றும் கலாச்சாரம் சார்ந்த முறைமைகளை ஒவ்வொரு கிறிஸ்தவனும் எதிர்க்கவேண்டும்.

பொருள் செல்வம், சமூக அந்தஸ்து, நல்லொழுக்கம் சார்ந்த சுயமாக கற்பிக்கப்பட்ட தார்மீக உரிமை, அல்லது அதிகாரத்தை வலுப்படுத்துதல் என மனிதர்கள் பற்றிக்கொண்டிருக்கும் தற்காலிக காரியங்கள் மீது விசுவாசிகள் ஆராய்ந்து சரியான பார்வையை கொண்டிருக்க நாகூம் அழைக்கிறது. இவ்விதமான விக்கிரகங்கள் மனிதனால் உண்டாக்கப்பட்டவைகள், இரட்சிப்பதற்கும் திருப்த்திபடுத்துவதற்கும் கூடாதவைகள், இவைகள் வல்லமையற்றது என ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது (நாகூம் 1:13).  அசீரிய ராஜ்யத்தின் மீதான நாகூமின் சுவிசேஷ செய்தியானது, தேவனின் நியாயத்தீர்ப்பு மற்றும் இரட்சிப்பின் அடிப்படையில் கலாச்சாரத்தை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது என்பதை வாசகர்களுக்கு காண்பிக்கிறது, மேலும் பயனுள்ள சாட்சிகளாக மாறுவதற்கு விசுவாசிகளை ஆயத்தப்படுத்துகிறது. மேலும் நல்லவராகிய தேவனை விட்டுவிட்டு, அவர் மட்டுமே செய்யும் நன்மைகளை இவ்வுலகம் செய்யும் என ஏமாற்றும் பொய்யான வாக்குத்தங்களுக்கு நாம் ஏமாந்து போகாதபடிக்கும் நமது நம்பிக்கைகளை இவற்றில் அலையவிடாதபடிக்கும் பாதுகாத்து, தம்மை அறிந்தவர்களை முழுவதும் இரட்சித்து திருப்திபடுத்தும் என்ற உண்மையை நாகூம் போதிக்கிறது (நாகூம் 1:7).

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டேனியல் டிம்மர்
டேனியல் டிம்மர்
டேனியல் டிம்மர் டாக்டர் டேனியல் டிம்மர் கிராண்ட் ரேப்பிட்ஸ் ல் உள்ள பியூரிட்டன் சீர்திருத்தத்த இறையியல் கல்லூரியில் பேராசிரியராகவும் முதுகலையின் இயக்குனராகவும் உள்ளார். சீர்திருத்த சபையில் மூப்பராக உள்ளார். நாகூமின் விளக்கவுரை போன்ற அநேக புத்தகங்களுக்கு ஆசிரியராகவும் உள்ளார்.