11-03-2025
நாகூம் புத்தகம் வாசிப்பதற்கு சற்று கடினமான ஒன்றாக இருக்கும். அசீரியா மீதான தேவனின் நியாயத்தீர்ப்பு, பாவம் வெற்றிப்பெற தேவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என்பதை கூறினாலும், நினிவேயின் வீழ்ச்சியின் மீதான இப்புத்தகத்தின் கொண்டாட்டத்தையும் அல்லது தொடர்ச்சியான தேவனின் தண்டனையின் மீது செலுத்தும் கவனம் சுவிசேஷத்துடன் எவ்வாறு ஒத்துப் போகிறது என்பதை புரிந்து கொள்வது கடினமான ஒன்றாக இருக்கலாம்.