The Holy of Holies

மகா பரிசுத்த ஆசரிப்பு கூடாரம்

11-06-2026
The Holy of Holies

மகா பரிசுத்த ஆசரிப்பு கூடாரம்

11-06-2026

நான் அகப்பட்டதுபோல் உணரும்போது 

When I Feel Stuck

நான் அயர்லாந்தில் வளர்ந்தபோது, புதன்கிழமை பிற்பகல்களில் மழை பெய்வதை அளவுக்கு அதிகமாகவே நாங்கள் அனுபவித்திருக்கிறோம். வாரத்தின் இறுதி நாட்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு மாலை நேரத்தில் வீட்டுப்பாடங்கள் செய்வதற்கு காத்திருந்த நிலையில் பெய்யும் மழைச்சாரலில் நனைந்தபடி பள்ளியிலிருந்து தடுமாறி திரும்பி வீட்டுக்கு வந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஈரப்பதத்தால் புத்தகங்களின் பக்கங்கள் அலையலையாக மாறி இருந்த காட்சி ஒருபுறம், கணுக்கால் வழியாக உள்ளே புகுந்து கால் விரல்கள் வழியாக வெளியேறிய நீரால் முழுமையாக நனைந்து போன எனது கால் உரைகள் மறுபுறம். இப்படியிருந்தும் குளியல் தொட்டியில் மாட்டிக்கொண்ட பூனையைப் போலவே நான் மகிழ்ச்சியாக இருந்தேன் (ஆனால் அந்த பூனையைப் போல அவ்வளவு ஆக்ரோஷமாக இல்லை).

இதைப்போலவே ஆத்துமாவுக்கு தனது சொந்த “ஈரமான புதன்கிழமையின் பிற்பகல்கள்” நன்றாக தெரியும். அனைத்து கெட்ட குமாரர்களும், ஆதாமின் தேர்வினால் நாம் இந்த நோய் வாய்ப்பட்ட உலகத்தில் வழியாக வீட்டுக்கு செல்லுகிறோம். அனைத்து சந்தோஷத்தையும் வீழ்ச்சி தணிக்கிறது. பாவத்தின் கடும் பார சுமையும், அவமானமும், துக்கமும் நமது தோள்களில் கடிக்கின்றது. உள்ளே அச்சங்களும் வெளியே இடர்பாடுகளும் இடிமேகங்களைப் போலக் காரிருளாய் சூழ்ந்து நிற்கின்றன. தகப்பன் நம்மை வரவேற்பதற்கு ஓடி வரும் சத்தத்தை கேட்பதற்கும், அவரது பலமுள்ள கரங்கள் நம்மை அரவணைப்பதற்கும், அவரது கண்ணீர் நமது கண்ணங்களில் வெதுவெதுப்பாய் விழுவதையும் நாம் ஏங்குகிறோம். ஆனால் ஏமாற்றம் நிறைந்த காத்திருப்புகள் நிலையான தோழனைப் போல நம்மை தொடர்கிறது. நமது சிறப்பான தருணங்கள் எப்போதும் தடைப்படுகின்றன, வார நடுவில் இருக்கும் மாணவனுக்கு வார இறுதி எவ்வாறோ அதேபோல் பரலோகம் என்றென்றும் எட்டாத தொலைவில் இருப்பது போல் அந்த அளவுக்கு உணரப்படலாம். 

இக்காலகட்டங்களின் மிக மோசமான தருணங்களுக்கு எந்த விளக்கமும் கிடைப்பதில்லை. எந்தவொரு குறிப்பிட்ட பாவமோ, தோல்வியோ, அல்லது தவறோ குற்றவாளியாத் தனித்துத் தெரிவதில்லை. நாம் சோர்வாக உணர்கிறோம், ஆனால் அதற்கான காரணம் நமக்குத் தெரிவதில்லை ( சங்கீதம் 42:5 ). இந்தத் தொலைதூர நிலையில், உணர்வுகளின் மீது கட்டப்பட்ட ஒரு இருண்ட இறையியலுக்கு நாம் எளிதில் இரையாகிறோம். மனச்சோர்வூட்டும் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு அங்கு தொடர்கிறது: தேவன் பேசுவதை நாம் உணர்வதில்லை, அதனால் நாம் நமது வேதாகமத்தை வாசிப்பதை நிறுத்திவிடுகிறோம். தேவன் கேட்பதை நாம் உணர்வதில்லை, அதனால் நாம் நமது ஜெபங்களைச் சொல்வதை நிறுத்திவிடுகிறோம். மந்தநிலை எல்லாவற்றையும் மழுங்கடிக்கிறது; நாம் எங்கும் செல்வதில்லை. என்ன செய்வது?

முதலாவது, நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் தனியாக இல்லை. அனைத்து தேவ பிள்ளைகளும் இந்த வழியாகவே சென்றிருக்கின்றனர். எவ்வளவு முறை சங்கீதக்காரர்கள் கைவிடப்பட்டது போல் உணர்ந்திருக்கிறான், ஆயினும் அவர்கள் சங்கீதங்கள் வழியாக தேவனை அடைந்திருக்கிறார்கள். தாவீது கதறுகிறார்: கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? (சங்கீதம் 13:1). கோராகு புத்திரர்கள் கூறுகிறார்கள்: மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சி;த்துக் கதறுகிறது. (சங்கீதம் 42:1). இந்த அனைத்து பரிசுத்தவான்களும் தேவனுக்கு முன்பாக வந்து எவ்வளவு காலம் தேவன் தம் முகத்தை அவர்களை விட்டு மறைப்பார் என்று கேட்டனர். இங்கு ஓர் பாடம் உள்ளது: இந்த நல்ல மனிதர்கள் அவர்களின் நிலையை காட்டிலும் மிக மோசமாக உணர்ந்திருக்கின்றனர். இருட்டான தவிப்பில் இந்த மனிதர்கள் ஆரம்பித்தாலும், முடிக்கும் போது அதே தவிப்பில் முடிக்கவில்லை. சங்கீதக்காரன் வேதனையில் தவிக்கையில், அவர்களின் இருதயங்களிலிருந்து வேத வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன. கைவிடப்பட்டோம் என்ற உணர்வின் ஆழத்திலும், அந்த இருளிலும் கடவுள் அங்கேயே இருக்கிறார்; அவர் அவர்களுக்கு வார்த்தைகளை அருளி, அவர்களைத் தம்மோடு இணைய வழிநடத்தி, வேதத்தின் மூலம் ஊக்கப்படுத்துகிறார். நாம் உணர்வதை விட யாவே (தேவன்) எப்போதும் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார். 

இரண்டாவது, தேவனோடு உள்ள ஐக்கியத்தை தடுக்கும் வேதனை உண்டாக்கும் வழிகள் உங்களிடத்தில் உண்டோ என்று ஆராய்வதற்கு தேவனிடம் கேளுங்கள் (சங் 139;24). துன்பத்தின் வேரானது ஆதாமின் கசப்பான தேர்வினால் உண்டானது (துன்பம், போராட்டம் மற்றும் வலி எபிரெய வார்த்தைகளோடு தொடர்புடையது; ஆதி 3:16-17). தோட்டத்தில் நமது முதலாவது தகப்பன், தேவனுக்கு அப்பால் ஓர் சிறந்த வாழ்வை அடையும் குடும்ப மரபை தொடங்கி வைத்தார். ஆதாமின் இந்த வெற்றியைப் பற்றி இன்று உலகம் முழுவதுமாக நிறைந்திருக்கும் கல்லறைகள் சாட்சிக்கூறும். இருப்பினும் மனம்தளராதிருங்கள்: உங்களிடமிருந்து தேவபக்தியற்ற விருப்பங்களையும் செய்கைகளையும் அகற்றுவதற்காகவு அந்த நல்ல மருத்துவர் ஒருவர் மரித்தார் (பிலி 2:12-13). 

தேவனிடம் உண்மையாக இருங்கள்; உங்களது பாரங்கள் ஒவ்வொன்றையும் அவரால் சுமக்க முடியும்.

பாவத்தைத் தாண்டி, நம் இருதயங்களில் உள்ள களைகளையும், அதாவது ஆத்துமாவின் ஜீவனை நெரிக்கும் நச்சு ஆசைகளையும் நாம் தேட வேண்டும். விதைப்பவனின் உவமையில் இயேசு மூன்றை அடையாளம் காட்டுகிறார்: வாழ்க்கையின் பரபரப்பு, பணம் சொல்லும் பொய்கள், மற்றும் மற்ற காரியங்களின் மீதான ஆசை ( மாற்கு 4:19 ). களைகள் பெருகிக்கொண்டே இருந்தால், நாம் ஒருபோதும் நலமாக உணரமாட்டோம். அவற்றைக் கொல்ல, ஒரு சிறந்த வாழ்க்கையைப் பற்றிய வளமான எண்ணங்கள் எனும் பரலோக களைக்கொல்லியுடன் ஆவியானவர் ஆயத்தமாக இருக்கிறார் ( ரோமர் 8:5 ; பிலிப்பியர் 4:8 ; கொலோசெயர் 3:1-4 ). கிறிஸ்துவுடன் ஐக்கியமாகி, நாம் ஜீவனின் புதுமையில் நடக்கிறோம் (ரோமர் 6:1-14 ). 

மூன்றாவதாக, உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்: தேவனுடைய பராமரிப்பின்மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் சமாதானமாக இருக்கிறீர்களா? இரகசியமாகக் கோபமாக இருக்கும் ஒரு கடவுளிடம் நெருங்கிச் செல்வது கடினம். தேவையற்ற சுமைகள் ஜெபத்தின் நண்பனாக இருக்கலாம்; அவை நமது விருப்பத்தைத் தூண்டி, நம்மை நெருங்கி இழுக்கின்றன ( சங்கீதம் 55:22 ). ஆனால், நாம் அவற்றைப் பற்றிக்கொள்ள விரும்பினால், அவை பேசப்படாத யானைகளைப் போல ஜெப அறையை நெரித்து, நெருங்கிச் செல்வதற்கான நமது விருப்பத்தை மழுங்கடிக்கின்றன. கடவுளிடம் நேர்மையாக இருங்கள்; நீங்கள் கொடுக்க வேண்டிய ஒவ்வொரு சுமையையும் அவரால் சுமக்க முடியும்.

அனைத்து வேதனைகளின் முதற்காரணர் தேவனே என்று அறியும் போது அங்கு மாபெரும் சமாதானம் உருவாகிறது. நம்மை மூழ்கடிக்கச் செய்யும் அலைகள் அனைத்தும் அவருடையது (சங் 42:7). ஒவ்வொரு கஷ்ட காலங்களிலும் அவரே செய்லபடுகிறவர் (சங் 66:10-12). இன்னும் அதிகமாக, தேவன் நமக்காக இருக்கிறார். சுயத்தை மறுப்பதும், தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதுமே விசுவாச வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் மற்றும் கடைசிப் பாடங்களாகும். ஆனால், ஜான் நியூட்டன் கூறியது போல்: “ஏமாற்றம் எனும் பள்ளியில் சிறிது காலம் பயிற்சி பெறாமல்” இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்ளச் சிலரே தயாராக இருக்கிறார்கள்.

இருள் விலகாவிட்டால் என்ன செய்வது? பெரும்பாலும், மேலே செல்வதற்கான சிறந்த வழி, வெறுமனே விசுவாசிப்பதும் கீழ்ப்படிவதுமே ஆகும். யோபின் பொறுமையைக் கவனியுங்கள் ( யோபு 23:8–12 ). விரோதமான இருளின் பிடியில், அவர் குழப்பத்திலிருந்து (வச. 8–9) மனமாற்றத்தின் வழியாக (வ. 10) அர்ப்பணிப்புக்கு (வ. 11–12) நகர்வதைக் கவனியுங்கள். வீழ்ச்சியடைந்த உலகில், தன்னால் உணரக்கூடியதை விட அதிகமான இறையியலை எப்போதும் அறிந்திருக்க முடியும் என்பதை யோபு உணர்கிறார். விசுவாசம் அந்த இடைவெளியை இணைத்து, உணர்வுகளின் கரத்தால் எப்போதும் தொட முடியாத ஒரு மண்டலத்திற்கு அவரைக் கொண்டு செல்கிறது ( எபி. 11:1 ).

“நான் செல்லும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின், நான் பொன்னைப்போல வெளிப்படுவேன்” ( யோபு 23:10 ). நமது மிக மோசமான பயங்களை விடவும் உண்மையான ஒரு உத்தரவாதத்தை இந்தப் பயணத்திற்கு விசுவாசம் கொண்டுள்ளது. அதனால், அவர் நம்மைப் பற்றிக்கொள்வதால், நாமும் அவரைப் பற்றிக்கொள்கிறோம் (வச. 11-12). ஒரு நாய், பொம்மையைப் பற்றிக்கொள்வது போல, யோபு இந்த உண்மையை அதன் முழு மதிப்புக்கும் பற்றிக்கொள்கிறார். தான் தேவனைப் பற்றிக்கொண்டிருப்பதை அவரால் உணர முடியவில்லை, ஆனால் தன்னை ஒருபோதும் கைவிடாத ஒரு வலிமையான கரம் தன்னைப் பற்றிக்கொண்டிருப்பதை அந்த விசுவாசம் காண்கிறது.

எனவே, கடைசியில் புதன்கிழமை பிற்பகல்களின் ஈரப்பதத்துக்கான கேள்வி, “நான் என்ன உணர்கிறேன்?” என்பதல்ல “நான் எதை அறிகிறேன்” என்பதே.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

நீல் ஸ்டீவர்ட்

நீல் ஸ்டீவர்ட்

நீல் ஸ்டீவர்ட் டாக்டர் நீல் ஸ்டீவர்ட், தென் கரோலினாவின் கொலம்பியாவில் உள்ள முதல் பிரஸ்பைடேரியன் தேவாலயத்தின் மூத்த போதகர் ஆவார்.