5 Things You Should Know about David
தாவீது ராஜாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய காரியங்கள்.
13-02-2025
5 Things You Should Know about Marriage
திருமணத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்
20-02-2025
5 Things You Should Know about David
தாவீது ராஜாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய காரியங்கள்.
13-02-2025
5 Things You Should Know about Marriage
திருமணத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்
20-02-2025

பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

5 Things You Should Know about Being a Parent

நான் சமீபத்தில் ஒரு கொள்ளுத்தாத்தாவாகி, எங்கள் குடும்பத்தில் இரண்டு கொள்ளுப் பேத்திகளையும்,ஒரு கொள்ளுப் பேரனையும் வரவேற்றதில் மகிழ்ச்சியுற்றேன். பிள்ளை  வளர்ப்பு பற்றிய சில வேதபூர்வமான  கருத்துக்களை என் பேரக்குழந்தைகளிடத்திலும்,அவர்களுடைய  வாழ்க்கை துணையினிடத்திலும் நான் பகிர்ந்துகொண்டேன்.அவைகள் பின்வருமாறு,

1. பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோரின் கடமையானது கடவுள் கொடுத்த ஒரு முக்கியமான அழைப்பாகும்.

சங்கீதம் 78 யில்’

“அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்து கொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;” (சங்கீதம் 78:5-7) என்று எழுதப்பட்டுள்ளது.

தேவனை  பற்றிய சத்தியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதை  விட முக்கியமானது எதுவாக இருக்க முடியும்? தலைமுறை தலைமுறையாக ஜீவனுள்ள தேவன்  மீது தங்கள் நம்பிக்கையை வைப்பதை விட அதி முக்கியமான பாரம்பரிய சொத்து எதுவாக இருக்க முடியும்? உங்களுடைய  வாழ்க்கையிலும்  பல சவாலான காரியங்கள் இருந்தாலும், பிள்ளைகளை  “கர்த்தருடைய சிட்சையிலும் போதனையிலும்” வளர்ப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் பெற்றோர்கள் வெகு சிலரே (எபே. 6:3).

2. அதிகாரத்தின் கீழ் வாழக் கற்றுக்கொள்வதே அடித்தளமாகும்.

எபேசியர் 6:1–3-ல், தேவன் பிள்ளைகளுக்கான அறிவுரையில் இவ்வாறு கூறுகிறார்: “பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும்,பூமியிலே உன் வாழ் நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணுவாயாக  என்பதே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட முதலாம் கற்பனையாகும்” என்றும் உரைத்திருக்கிறார்.  பிள்ளைகள் வாழ்வதற்கான ஒரு வட்டத்தை  தேவன் இங்கே வரைந்திருக்கிறார் . பெற்றோரை கனம்பண்ணி அவர்களுக்கு  கீழ்ப்படிவதே  இந்த வட்டத்தின் எல்லையாக தேவன் வைத்திருக்கிறார். இந்த  வட்டத்திற்குள்ளாக பிள்ளைகள் வாழும்போது தேவன் அவர்களை ஆசிர்வதிப்பேன் என்றும் வாக்குப்பண்ணியிருக்கிறார். பிள்ளைகள் அதன் மூலமாக நன்மையை அனுபவித்து, மகிழ்ச்சியாக நீண்டநாள்  இந்த உலகத்தில் வாழ முடியும்.

 இவ்விதமான ஆசிர்வாதங்களே ஒவ்வொரு குழந்தைக்கும், பெற்றோருக்கும் தேவையாக உள்ளது. ஒருவருக்குச் சொல்லப்பட்டதை வெறுமனே செய்வதை விட கனம்பண்ணுவதும், கீழ்ப்படிவதுமே மிகவும் அவசியமானது.  விசுவாசத்தின் அடிப்படையில் தேவனை நம்பி அவருக்கு கீழ்ப்படிவதே பிரதானமானதாகும். உங்கள் பிள்ளைகளுக்கு அதிகாரத்தின் கீழ் இருக்கக் கற்றுகொடுக்கும்போது, தேவனின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து  நடப்பதே ஆசீர்வாதத்திற்கான உண்மையான வழி  என்ற அடிப்படை சத்தியத்தையும் இங்கே புகட்டுகிறீர்கள்.

3. வாழ்விற்கான ஜீவ ஊற்று இருதயமே

“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தை காத்துக்கொள்,அதனிடத்தினின்று  ஜீவ ஊற்று புறப்படும்.” (நீதி. 4:23)

 வாழ்க்கை இருதயத்திலிருந்து புறப்பட வேண்டும் .  நாம் பாவம் செய்யும் விதங்கள் மட்டும் நம்முடைய பிரச்சனை அல்ல, மாறாக அந்த பாவமும் பாவத்தின் கீழேயே உள்ளது. பெருமை, சுயத்திற்கு அடிமைபடுதல், சுய அன்பு, பொறாமை மற்றும் இருதயத்திலிருந்து புறப்படும் பலவிதமான பாவ சுபாவங்கள் நம்முடைய வெளிப்பிரகாரமான நடத்தையையும் பாதிக்கின்றதாயிருக்கிறது. பெற்றோர்கள் மிக எளிதாக இருதயத்தினுடைய கேடுபாடுகளை மறந்து  வெளிப்பிரகாரமான சுபாவத்தை சரிசெய்கிறவர்களாய் இருக்கிறார்கள்.

பேராசை, வஞ்சகம், பொறாமை, அவதூறு, ஆணவம் மற்றும் பெருமை போன்ற நடத்தைகள் இருதயத்திலிருந்து புறப்படுவதாக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு நினைவூட்டுகிறார். (மாற்கு 7:2–23 ஐப் பார்க்கவும்). பெற்றோருடைய  ஒரு முக்கியமான  பணி என்னவென்றால் , பிள்ளைகள் பாவம் செய்யும் போது  அதற்கு காரணமாயிருக்கிற  இருதயத்தினுடைய கேட்டை அவர்கள் அடையாளம் காண உதவுவதாகும். உண்மையாகவே, பிள்ளைகள் செய்யும்  பாவங்களுக்குக் அடிப்படையாக இருக்கும் இருதயத்தினுடைய கேட்டை  புரிந்துகொள்வது,  உங்கள் பிள்ளைகள் தங்கள் இருதயத்தின் தன்மையை குறித்ததான  நல்ல கேள்விகளைக் கேட்க அவர்களை உந்தி தள்ளுகிறதாயிருக்கிறது.

4. சுவிசேஷம் மையமாக இருக்க வேண்டும்.

 நித்திய ஜீவனைப் பெறுவதற்கு நான் எவ்வளவு நன்மைகளை செய்ய வேண்டும் என்ற கேள்வி நம்முடைய விசுவாசத்தின் மையமாக இருக்ககூடாது. நமது விசுவாசத்தின் மையமானது, இயேசு நமது இரட்சகராக அவதரித்து, நமக்காக அவர் என்ன நன்மைகளை செய்தார் என்பதை பொறுத்தே இருக்க வேண்டும். நாம் வாழமுடியாத வாழ்க்கையை அவர் வாழ்ந்தார்; நாம் நீதியைப் பெறுவதற்காக அவர் பாவமின்றி வாழ்ந்தார். நாம் சந்திக்ககூடாத மரணத்தை அவர் எப்படி மேற்கொண்டு மரித்தார்; நமது பாவத்தின் குற்ற உணர்ச்சியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் அவர்  நம்மை விடுவிக்க சிலுவையில் தம் உயிரைக் கொடுத்தார். நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக அவர் எப்படி உயிர்த்தெழுந்தார். இப்போதும் அவர் பிதாவின் வலதுபாரிசத்தில் நமக்காக பரிந்துபேசி கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சத்தியத்தின் அடிப்படையிலேயே நம்முடைய விசுவாசமானது கட்டப்பட வேண்டும்.

கிருபை, மன்னிப்பு, இரட்சிப்பு மற்றும் ஆளுகை  ஆகியவற்றின் மீது நம்முடைய பிள்ளைகளுக்கு  எப்போதும் ஆழமான நம்பிக்கை இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். உங்கள் பிள்ளைகளை நீங்கள் கண்டித்து, சீர்படுத்தும்போது, ​சுவிசேஷத்தின் மீதான நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்க மறவாதிருங்கள். பிள்ளைகள் தங்கள் சொந்தபலத்தினால் நன்மைசெய்ய முடியும் என்று நாம் சொல்லும்போது  சுவிசேஷத்தை மறுதலிக்கிறவர்களாய் இருக்கிறோம். ஒரு மனிதனாக, ஆண்டவராகிய  இயேசுகிறிஸ்து தாமே சோதிக்கபட்டதினால், சோதிக்கபடுகிற நமக்கு அவர் உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் என்கிற எபிரெயர் 2:17 இல் சொல்லப்பட்ட சத்தியம் நமக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறதாய் இருக்கிறது.

5. நீங்கள் உங்களை முன்மாதிரியாகக் கொண்டிருப்பது வல்லமை வாய்ந்தது.

உபாகமம் 6:5 இந்த உண்மையைப நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறது: “உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், உங்கள் முழு பலத்தோடும் அன்புகூருங்கள்.” தேவன் மீதான உங்கள் அன்பு, அவருக்குள்ளான உங்கள் மகிழ்ச்சி, கிறிஸ்துவுக்குள்ளாக தேவன் நமக்காக செய்துமுடித்த எல்லாவற்றிற்காகவும்  நமக்கிருக்க வேண்டிய நன்றி உணர்வை நம்முடைய பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நாம் காட்ட கடமைபட்டுள்ளோம். இந்த முன்மாதிரியானது  எவ்வளவு முக்கியம் என்பதை அடுத்த வசனம் நமக்கு நினைப்பூட்டுகிறது: “இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் இந்த வார்த்தைகள் உங்கள் இருதயத்தில் இருக்கட்டும். அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதிக்க வேண்டும்” (உபாகமம் 6:6–7). என்றுரைப்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும், நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் பயணிக்கும்போது, ​​உண்மையானவைகளை அவர்கள் அறிந்துவாழ உதவிசெய்யவேண்டும். தேவன் நல்லவர் என்றும், அவரை உண்மையாய் தேடுபவர்களுக்கு அவர் பலனளிக்கிறார் என்ற உங்களுடைய நம்பிக்கையை அவர்களுக்கு முன்மாதிரியாக காட்ட வேண்டும்.  தேவனையும், மற்றவர்களையும் நேசிப்பதன் மூலம், தேவனுடைய கட்டளைகள் எவ்வளவு நல்லது என்ற உண்மையையும்  நீங்கள் மாதிரியாகக் காட்டுகிறீர்கள். தேவனை தொழுது கொள்வதற்கு நீங்கள் முக்கியத்துவத்தை கொடுக்கும்போது, வாழ்க்கை தேவனுக்குள்ளாக இருக்கிறது என்பதையும் காட்டுகிறீர்கள். இரக்கமற்றவர்களிடம் நீங்கள் தயவாய் நடந்து கொள்ளும்போது, ​​தேவனின் பெருந்தன்மையையும், தயவையும் காட்டுகிறீர்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் உங்கள் பிள்ளைகளுக்கு சத்தியத்தின் பாதையை காட்டுகிறதாயிருக்கிறது.எல்லாவற்றிலும் தேவனுக்குள்ளான உங்களுடைய கீழ்ப்படிதல், உங்கள் இருதயத்திலுள்ள வாஞ்சையினுடைய எல்லா வழிகளிலும் காணப்படும். உங்களுடைய உண்மைதன்மை, மற்றும் கிருபையின் சுவிசேஷத்தின் மீதான  உங்களுடைய நம்பிக்கை போன்றவை உங்களுடைய பிள்ளைகளுக்கு மெய்யான வழியை காட்டுகிறதாய் இருக்கிறது. பிள்ளைகளை தேவனுக்கென்று வளர்ப்பதே இந்த உலகத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டபணியில் மிக உன்னதமான பணியாகும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டெட் டிரிப்
டெட் டிரிப்
டாக்டர் டெட் டிரிப், ஹாசில்டனில் உள்ள கிரேஸ் பெல்லோஷிப் திருச்சபையில் போதகராகவும், ஷெப்பர்டிங் தி ஹார்ட் ஊழியங்களின் தலைவராகவும் உள்ளார். அவர் ஷெப்பர்டிங் எ சைல்ட்ஸ் ஹார்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.