28-10-2025
ஒரு வயதான பெற்றோர் அல்லது நண்பர் இறக்கும்போது, அவர்கள் நன்றாக இந்த உலகத்தைவிட்டு விடைபெற்று சென்றனரா என்ற கேள்வியை  அக்குடும்பத்தினரிடம் நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இறக்கும் தருவாயில் அவர்கள் பேசின கடைசி வார்த்தைகள் மிகவும் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன; அது இறுதி விடைபெறுதலாக மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைக்க வேண்டிய ஞானமுள்ள மற்றும்  அன்புக்குரிய வார்த்தைகளாக எண்ணப்படுகிறது.
