Tracing the Story of Christmas
கிறிஸ்துமஸ் கதையின் நீண்ட தொடர்ப்பயணம்
04-11-2025
Tracing the Story of Christmas
கிறிஸ்துமஸ் கதையின் நீண்ட தொடர்ப்பயணம்
04-11-2025

பரிசுத்த தேவனுடனான போரும் சமாதானமும்

War and Peace with a Holy God

(War and peace with a Holy God)

ஆர்.சி. ஸ்ப்ரௌல்

1945 ம் ஆண்டு கொளுத்தும் வெயிலில் சிகாகோ தெருக்களில் ஸ்டிக்பால் என்ற விளையாட்டை மிக மும்முரமாக நான் விளையாடிக்கொண்டிருந்தது என் நினைவில் உள்ளது. அந்த நேரத்தில் எனது உலகமானது ஒரு குறிப்பிட்ட  இடத்துக்குள்ளேயே அடங்கியிருந்தது. எனது வாழ்வின் முக்கிய தருணம் எல்லாம், விளையாட்டில் நான் பந்தை அடிப்பதற்கு எனக்கு வரும் வாய்ப்புதான். நான் அந்த பந்தை அடிக்க ஓங்கும் போது என்னைச் சுற்றி காணப்பட்ட குழப்பமும் சத்தமும் என்னை எரிச்சலூட்டியது. மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி மரக்கரண்டிகளால் பாத்திரங்களை அடித்துக்கொண்டே கத்தினார்கள். அந்த நேரத்தில் நான் நினைத்ததெல்லாம் இந்த உலகம் அழியப்போகின்றது என்றுதான். நிச்சயமாக அது எனது விளையாட்டிற்கும் முடிவாக இருந்தது. இந்த கலவரத்தின் குழப்பத்தில் முகத்தில் கண்ணீர் வழிந்தோட எனது அம்மா என்னை நோக்கி ஓடிவந்தார். அவள் என்னைத் தன் கைகளில் ஏந்தி அணைத்துக்கொண்டு, “முடிந்தது. முடிந்தது. முடிந்தது.” என்று திரும்ப திரும்ப அழுதாள். 

அந்த நாள் 1945 ல் உலகப்போரில் ஜப்பான் மீதான (VJ Day) வெற்றியாகும். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று முழுமையாக தெரியவில்லையென்றாலும் ஒன்று தெரிந்தது, போர் முடிவுக்கு வந்தது, எனது அப்பா வீட்டிற்கு வரப்போகிறார் என்று. இனி தொலை தூரநாடுகளுகக்கு அனுப்பப்படும் விமான அஞ்சல் தேவையில்லை. அனுதின போர்த்தகவல்களைப் பற்றி இனி நாளிதழ்களில் வாசிக்கவேண்டிய அவசியமில்லை. நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட பதாகைகள் இனி ஜன்னலில் தொங்கவிடவேண்டிய அவசியமில்லை. போரைப் பற்றிய எவ்வித எச்சரிப்புகளும் இனி வீடுகளில் அவசியமில்லை. போர் முடிந்தது, இறுதியில் அமைதி வந்திருக்கிறது.

இந்த பெரும் மகிழ்ச்சியின் நிகழ்வு, அழியாத நினைவுகளை என் சிறுவயதின் மூளையில் ஏற்படுத்தியது. சமாதானம் என்பது ஓர் மிக முக்கியமான காரியம் என்பதை கற்றுக்கொண்டேன், அது நிலைநாட்டப்படும் போது எல்லையில்லா சந்தோஷமும், அது இழக்கப்படும் போது கசப்பான துன்பத்திற்கும் காரணமாயிருக்கிறது. அன்று அந்த சிகாகோ தெருக்களில் என்னில் ஏற்ப்பட்ட எண்ணம் என்னவென்றால், என்றென்றும் சமாதானம் வந்துவிட்டது என்பதுதான். இந்த சமாதானம் எந்தளவுக்கு உடையக்கூடியது என்று எனக்கு தெரியாதிருந்தது. சீனாவில் படைகள் குவிப்பு, ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல், மற்றும் பெர்லின் முற்றுகை போன்ற செய்திகளை கேப்ரியல் ஹீட்டர் போன்ற செய்தியாளர்கள் அறிவிக்கிற வரைக்கும் இந்த சமாதானம் குறுகிய கால அளவை கொண்டதுபோலவே இருந்தது. அமெரிக்காவின் அமைதி குறுகிய காலமே நீடித்தது, மீண்டும் அமெரிக்கா கொரியாவிலும் வியட்நாமிலும் போருக்கு அடிப்பணிந்தது.

நாம் சார்ந்தக்கொள்ளக்கூடிய நித்திய சமாதானத்தை நாம் எதிர்பார்க்கிறோம்

இந்த பூமிக்குரிய அமைதியின் இயல்பான நிலைகள் பெலவீனமானது. நிலையற்றது. நிரந்தரமில்லாதது. நாடுகளின் விதிகளைப் போலவே அமைதி ஒப்பந்தங்களும் மீறப்படுகிறது. மில்லியன் நெவில் சேம்பர்லயன்ல் பால்கனியில் சாய்ந்துக்கொண்டு, “நாம் நமக்கான அமைதியை அடைந்து விட்டோம்” என்று சொன்னாலும், மனித வரலாறு ஒரு தொடர்ச்சியான அமைதியை கொண்டிருக்கும் என்று எப்போதும் உறுதி செய்யமாட்டார்கள்.

நாம் சமாதானத்தை விரைவில் அதிகமாக நம்பக்கூடாது என்பதைக் கற்றுக் கொள்கிறோம். போர் மிக விரைவாகவும், மிக எளிதாகவும் ஊடுருவுகிறது. ஆனாலும் நாம் நம்பியிருக்கக்கூடிய நீடித்த அமைதிக்காக ஏங்குகிறோம். இது துல்லியமாக இதுபோன்ற அமைதியைத்தான் அப்போஸ்தலன் பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் அறிவித்தார்.

கடவுளுடனான நமது பரிசுத்தப் போர் நிறுத்தப்படும்போதும் லூதரைப் போல, நாம் பரலோகத்தின் வாசல் வழியாக நடக்கும்போதும், விசுவாசத்தால் நாம் நீதிமான்களாக்கப்படும்போது, போர் என்றென்றும் முடிவடைகிறது. பாவத்திலிருந்து சுத்திகரிப்பு மற்றும் தெய்வீக மன்னிப்பை அறிவிப்பதன் மூலம் நாம் கடவுளுடன் ஒரு நித்திய சமாதான ஒப்பந்தத்தில் நுழைகிறோம். நமது நீதிமானாக்குதலின் முதல் பலன் கடவுளுடனான சமாதானம். இந்த சமாதானம் ஒரு பரிசுத்த சமாதானம், மாசற்ற மற்றும் எல்லைக்கும் அப்பாற்பட்ட சமாதானம். இது அழிக்க முடியாத சமாதானம்.

தேவன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது அது நிரந்தரமாக செய்யப்படுகிறது. போர் என்றென்றும் முடிந்துவிட்டது. நிச்சயமாக நாம் இன்றும் பாவம் செய்கிறோம், கலகம் செய்கிறோம், நாம் இன்னும் கடவுளுக்கு விரோதமான செயல்களைச் செய்கிறோம். ஆனால் தேவன் நமக்கு கொடூர எதிரியாக மாறுவதில்லை. அவர் நம்முடன் போர் செய்வதில்லை. காரணம் பிதாவிடம் நமக்கான பரிந்துப் பேசுபவர் உள்ளார். சமாதானத்தைக் காக்கும் ஒரு மத்தியஸ்தர் நமக்கு இருக்கிறார். அவர் சமாதானத்தின் மீது ஆட்சி செய்கிறார். ஏனென்றால் அவர் சாமாதானத்தின் பிரபு மற்றும் அவரே சமாதானம்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.