Soul Rest - Jonathan L. Master
ஆத்தும இளைப்பாறுதல்
21-10-2025
Soul Rest - Jonathan L. Master
ஆத்தும இளைப்பாறுதல்
21-10-2025

தேவனின் சுய வெளிப்பாடு

The Self Disclosure of God

(The Self-Disclosure of God)

ஆண்ட்ரூ M டேவிஸ்

சோதோம் கொமோராவின் அழிவுக்கு முன்பு தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே நடந்த சந்திப்பைப் பற்றி நான் சமீபத்தில் யோசித்துக் கொண்டிருந்தபோது ஆச்சர்யமூட்டும் ஓர் உணர்வு ஏற்பட்டது. இது, “நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ” (ஆதி 18:17) என்று தேவனின் மனதில் உள்ள கேள்வியைப் பற்றியது. 

இந்த கேள்வியின் பதிவு நம்மிடம் இருப்பது ஓர் அற்புதமான காரியம். இது முற்றிலுமாக தேவனுடைய மனதில் உள்ள உள்ளார்ந்த எண்ணமாக இருந்தது. இதுபோன்ற ஓர் காரியம் நடந்திருக்கிறது என்பது அப்போது ஆபிரகாமுக்கு அப்போது தெரியவில்லை. அல்லது அதற்கு பிறகு இதைப்பற்றி தேவன் ஆபிரகாமோடு பேசினார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பரிசுத்த ஆவியானவரின் அகத்தூண்டுதலினால் ஆதியாகமம் புத்தகத்தை மோசே எழுதுகிற வரைக்கும் சுமார் ஐந்நூறு ஆண்டுகள் வரை தேவனின் மனதில் இருந்த காரியம் வெளிப்படவில்லை. தேவனின் புரிந்துக்கொள்ள முடியாத மனதில் உள்ள இந்த சிந்தனையை ஆவியானவர் மோசேக்கு வெளிப்படுத்தினார், மேலும் மோசே இதை அடுத்த தலைமுறையினருக்காக எழுதினார். தேவன் தனது இருதயத்தை நம் அனைவருக்கும் வெளிப்படுத்தினார்.

இந்த வெளிப்பாடுதான் தேவன் தமக்குள்ளே பேசின காரியத்தின் அம்சமாக இருந்தது. சோதோம் கொமோராவின் பொல்லாத நகரங்களை நெருப்பாலும் கந்தகத்தாலும் எரித்து சாம்பலாக்கப் போவதைக் குறித்து அவர் தனக்குள்ளே விவாதித்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக இங்கு, “தேவன் தமக்குள்ள விவாதித்துக்கொண்டிருந்தார்” என்ற பதமானது “ஆந்த்ரோபோமார்ப்பிஷம்” அதாவது நாம் தேவனைப் பற்றி மனித மொழி நடையில் அறிந்துக் கொள்வதற்கு அவர் தம்மை மனித மொழி நடையிலேயே வெளிப்படுத்தும் ஓர் இறையியல் வார்த்தையாகும். எல்லாவற்றையும் அறிந்த கடவுள் நமக்குள்ளேயே வாதிடுவதில்லை. ஆனால் தேவன் இவ்விதமான “மொழிநடையை” பயன்படுத்தி தன்னை நமது நிலைக்குத் தாழ்த்தி, அவரை நாம் புரிந்துக் கொள்ளும்படிச் செய்தார். 

அற்புதமான உண்மை என்னவென்றால், ஆபிரகாமிடமிருந்து எவ்வித உண்மையையும் தேவன் மறைக்க விரும்பவில்லை என்பதுதான்‌. ஆபிரகாமுக்கோ அல்லது எந்த மனிதனுக்கோ தேவன் தம்மை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் இல்லையென்றாலும், தேவன் தம்மால் தெரிந்துக்கொள்ளப்பட்ட மக்களுக்கு தனது மனதை காண்பிக்க அதிகமான விருப்பங்கொண்டார். தேவனின் இந்த சுய வெளிப்பாடுதான் நமது இரட்சிப்பிற்கான ஆதாரமாகும். இயேசு கிறிஸ்து கூறுவதுபோல், “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”(யோவான் 17:3). ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் எனப்பட்டான் (ஏசாயா 41:8). நட்பிற்கான சாரம்சமே தன்னைத்தான் வெளிப்படுத்துவதுதான்‌. தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்த விரும்புகிறார், மற்றும் நான் எதை விசுவாசிக்கிறேன் என்றால், பரலோக ராஜ்யம் என்பது தேவனுடைய மனது மற்றும் நோக்கங்களில் தேவனுடைய மக்களின் நித்திய கற்பிடமாக இருக்கும். அது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும். இதுவரை இருந்த ஒவ்வொரு நாட்டின் வெற்றி மற்றும் வீழ்ச்சியையும், ஒரு குருவி தரையில் விழுந்ததையும் தேவன் ஆளுகை செய்துள்ளார். அங்கு தேவனுடைய ராஜரீக திட்டத்தின் சிக்கலான அமைப்பையும், தெளிவையும் கற்றுக்கொள்வதற்கு எல்லையில்லாத காரியங்கள் பரலோகத்தில் இருக்கும். மற்றும் இவற்றை கற்பிப்பது அவரின் மகிழ்ச்சியாகவும் அதைக் கற்றுக்கொண்டு பிரம்மிப்பது நம்முடைய பாக்கியமாகும் இருக்கும்.

நிகழ்காலத்தில் தேவனுடைய அநேக தீர்மானங்கள் நமக்கு மறைக்கப்பட்டுள்ளது. இயேசு கூறுகிறார், “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.” (யோவான் 16:12). இவ்விதமான சத்தியங்களை நமது மகிமையடைந்த ஆத்துமா கிரகித்துக்கொள்ளும்வரைக்கும், தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அநேக சிக்கலான மற்றும் வலிமிகுந்த காரியங்கள் மறைக்கப்பட்டுத்தான் இருக்கவேண்டும். ஆனால் தேவனின் திட்டம் மேலும் வெளிப்படுத்தப்படும், அது பிரகாசமாக மகிமையுடன் இருக்கும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆண்ட்ரூ எம். டேவிஸ்
ஆண்ட்ரூ எம். டேவிஸ்
El டாக்டர் ஆண்ட்ரூ எம். டேவிஸ், கரோலினா டெல் நோர்டே, டர்ஹாமில் உள்ள முதல் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் போதகராகவும், தென்கிழக்கு பாப்டிஸ்ட் இறையியல் கருத்தரங்கில் வரலாற்று இறையியல் பேராசிரியராகவும் உள்ளார்.