
கிரியைகளின் உடன்படிக்கை
05-02-2026திருச்சபையில் தலைமைத்துவம்
பவுல் ஓர் அப்போஸ்தலர் நாம் அல்ல என்பது ஒரு உண்மைதான். இருப்பினும், பவுல் ஓர் ஊழியக்காரர், திருச்சபையில் பணி செய்பவர்களும் ஊழியர்கள்தான். கிறிஸ்தவ தலைமைத்துவப் பணியில் செயல்படும் அனைத்து ஆண்களுக்கும் அப்போஸ்தலர் பவுலுக்கும் இடையே ஓர் தொடர்பு புள்ளி உள்ளது, அவரிடமிருந்து சில நுட்பங்களையும், வழிமுறைகளையும், முக்கிய காரியங்களையும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.
1 கொரிந்தியர் 2:1-5 ல் பவுல் எழுதுகிறார்:
“சகோதரரே நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப் பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது.”
பவுல் கொரிந்திய மக்களிடம் பேசும்போது, “ஞானத்தினாலும், நயவசனிப்பினாலும்” அணுகவில்லை என்று கூறுகிறார். அதாவது பவுல் கூறுகிறார்: “நான் உங்களிடத்தில் வந்தபோது உங்களை கவர்ந்திழுக்கும் படி நான் முயற்சிக்கவில்லை. நான் ஒரு உயர்ந்த நிலையின் மனப்பான்மையோடு உங்களிடம் வரவில்லை. எனது தலைமைத்துவ பொறுப்பை அகம்பாவத்திலும் பெருமையிலும் நான் காண்பிக்கவில்லை.” இதுதான் தெய்வீக ஊழியம் மற்றும் தலைமைத்துவத்தின் முதன்மையான கொள்கையாக இருக்கவேண்டும். நமது பேச்சிலோ, நமது நடத்தையிலோ, அல்லது மனப்பான்மையிலோ நாம் உயர்ந்தவர்களாக காண்பித்துக் கொள்ளக்கூடாது. பவுல் அவரது ஞானத்திலும், அறிவிலும், தாலந்துகளிலும், பெலத்திலும் உயர்ந்தவராக இருந்தார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் தன்னை ஓர் உயர்ந்தவராக காண்பித்துக் கொள்ளவில்லை. அவர் பெலவீனமான சூழலில் தேவனுடைய ஊழியத்தை செய்தார் என்பதை விளக்குகிறார்.
“இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். (1 கொரி 2:2). இங்கு பவுல் உயர்வு நவிற்சி இலக்கணத்தோடு பேசுவதுபோல தோன்றுகிறது, அவர் சிலுவையைப் பற்றி மாத்திரமல்ல வேறு அநேக காரியங்களையும் பவுல் போதித்திருக்கிறார். இறையியலின் அனைத்து கோணங்களையும், தேவனுடைய முழு ஆலோசனையையும் அவர் பேசியிருக்கிறார். ஆனால் அவர் போதித்த மற்ற எல்லா காரியங்களையும், கிறிஸ்துவுக்குள்ளும் அவரது சிலுவை மரணத்திலும் வைத்து இவற்றிற்கு முன்னுரிமையையும், மைய கவனத்தையும் செலுத்தினார். அவர் வேறு எதையும் அறிய தீர்மானிக்கவில்லை, “அறிதல்” என்ற வார்த்தைக்கான கிரேக்க பதம், வெறுமனே உள்ளார்ந்த மூளை அறிவில் அல்லாமல், நெருங்கிய ஓர் ஐக்கியத்தின் பிணைப்பைக் குறிக்கிறது. அவர் கிறிஸ்துவை அறிய விரும்பினார், கிறிஸ்துவை அறிகிற அறிவு தலைமைத்துவ நிலைக்குள்ளாக பவுலை வழிநடத்தியது.
3 வது வசனம்தான் பவுலின் வாழ்வில் ஓர் ஊழியனாக, போதகனாக மற்றும் கிறிஸ்தவ தலைவராக வாழ்வதற்கு ஓர் வெற்றியின் காரணமாக இருக்கிறது: “அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.” அவரது ஊழியத்தில் அவர் எவ்விதமாக இருப்பினும், தனது மக்களால் தொடர்ச்சியாக அவர் பெலவீனத்தோடும், பயத்தோடும் மற்றும் நடுக்கத்தோடும் பார்க்கப்பட்டார். கிறிஸ்தவ தலைமைத்துவத்தில் ஒரு குழுவின் இயக்கத்தில் அடிக்கடி எழக்கூடிய கேள்வி என்னவென்றால், மக்களை வழிநடத்துபவர்கள் தங்களது தலைமைத்துவத்தைப் பற்றிய பயங்களையும் கவலைகளையும் மறைக்க வேண்டுமா என்பதுதான். அதாவது, தலைவர்கள், எல்லாம் கட்டுபாட்டில் இருப்பதாகவும், எந்த பிரச்சனையும் அங்கு இல்லை என்றும் பாசாங்கு செய்து, ஓர் குளுமையான தோரணையை காண்பிக்க முயற்சிக்கவேண்டுமா? அல்லது தாங்களும் பாதிப்புக்குள்ளானவர்கள்தான் என்பதை வெளிப்படுத்தவேண்டுமா?
இதுதான் தெய்வீக ஊழியம் மற்றும் தலைமைத்துவத்தின் முதன்மையான கொள்கையாக இருக்கவேண்டும். நமது பேச்சிலோ, நமது நடத்தையிலோ, அல்லது மனப்பான்மையிலோ நாம் உயர்ந்தவர்களாக காண்பித்துக் கொள்ளக்கூடாது.
மேற்கண்ட கேள்வி பதிலளிப்பதற்கு கடினமான ஒன்றுதான். நிச்சயமாக, நாம் ஒரு நாடகத்தில் ஈடுபடவோ அல்லது கட்டுபாட்டில் இல்லாத காரியத்தில் எல்லாம் நமது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது போலவும் செயல்பட நாம் அழைக்கப்படவில்லை. அது வெறுமனே நேர்மையற்றது. அதேசமயம், ஓர் குழுவின் தலைவர் ஓர் கூட்டத்தை நடத்தும் பட்சத்தில் அங்கு ஒருவேளை சந்திக்கும் பயங்களையும் கவலைகளையும் ஒத்திகைப் பார்க்கவேண்டுமா என்பதும் இதன் அர்த்தமல்ல. அந்த நேரத்தில், தலைவர் தனது அனைத்து அசௌகரியங்களைம், பதட்டங்களையும் அப்பட்டமாக வெளிப்படுத்தும் இடமாக மாறினால், அங்கு ஒருமையின் நோக்கம் சிதைக்கப்படுகிறது. பயத்தோடும் பெலவீனத்தோடும் மக்களோடு இருக்கவேண்டும் என்பதின் அர்த்தம் இது அல்ல, ஆனால் நேர்மையின் ஸ்தானத்தில் மக்களை நடத்துவதற்கான அழைப்பு அங்கு உள்ளது. தலைவர்கள் இல்லாத ஒன்றைப்போல நடிக்காமலிருக்கவும், ஒரு காரியத்தை நடப்பிக்கும் திறன் இல்லாத பட்சத்தில் அதை செய்வதைப்போல பாசாங்கு செய்யாத படிக்கும் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
தேவன் ஒருவேளை உங்களை தலைமைத்துவத்திற்கு அழைத்திருப்பாரென்றால், அங்கு நீங்கள் வளருவதற்கே நிச்சயமாக வைத்திருக்கிறார், ஆனால் இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அந்த நிலையிலேயே அவர் உங்களை அழைத்திருக்கிறார். தேவன் தமது பராமரிப்பினால் உங்களின் அழைப்பிற்கு காரணராக இருக்கிறாரென்றால், நீங்கள் இப்பொழுது அவரால் பெற்றிருக்கிற வரங்கள், தாலந்துகள் மற்றும் திறமைகள் மூலமாக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே இந்த சிந்தனையில், நீங்கள் இல்லாத ஒரு காரியத்திற்காக பாசாங்கு செய்ய தேவையில்லை. நீங்கள் இருக்கிறவண்ணமாகவே அவர் உங்களை அழைத்திருக்கிறார். ஆனால் அந்த நிலையிலேயே இருப்பதற்கு அவர் விரும்பவில்லை; நீங்கள் வளர்ந்தேறுவதற்கு அவர் விரும்புகிறார், நீங்கள் நகருவதற்கு விரும்புகிறார், நீங்கள் முன்னேறுவதற்கு தேவன் விரும்புகிறார்; ஆனால் கவலைகள் இல்லாமல், உங்களது குறைகளை எண்ணி தயக்கமடையாமல் வளருவதற்கே விரும்புகிறார்.
பவுல் எல்லா இடங்களிலும் கூறுகிறார், “ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாரட்டுவேன்.”
(2 கொரிந்தியர் 12:9). பவுல் தமக்கு முன்பாக எப்போதும் வைத்திருந்த காரியம், அவரிடம் உள்ள பெலனும், அவர் பயன்படுத்தவேண்டிய தாலந்துகளும், தனக்குள் அல்ல கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும் அவற்றின் வல்லமையின் இருப்பிடத்தை கண்டிருக்கும் தாலந்துகளும், பெலனும் மற்றும் வரங்களும்தான். இந்த உண்மை எவ்வித தலைமைத்துவத்தில் உள்ள எந்த நபரையும் ஆறுதல் படுத்தும். ஆனால், எப்பொழுது பவுல் தனது மக்களுக்கு ஊழியம் செய்கிறாரோ, அப்போதெல்லாம் தனது சுய பலவீனத்தையும், குறைகளையும், பயங்களையும் பற்றி பிரதானமாக கவலைக் கொள்ளவில்லை. மாறாக, மற்ற மக்களின் படங்கள் மற்றும் பலவீனங்கள் மீது அக்கறைக் கொண்டார், இதுவே கிறிஸ்துவ தலைவருக்கான அடையாளம் என நான் நினைக்கிறேன்.
எப்பொழுது பவுல் கொரிந்தியருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாரோ, அவர் கூறுகிறார், “அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.” (1 கொரி 2:3) என்கிறார். அதாவது, அவருடைய மக்களின் பயம் மற்றும் பலவீனம் மற்றும் நடுக்கத்தை பற்றி அறிந்துக்கொள்வதில் அக்கறைக் கொண்டிருந்தார். வெறுமனே இது அப்போஸ்தலருக்கும் அல்லது நியமிக்கப்பட்ட போதகருக்கு மாத்திரமல்ல; கிறிஸ்தவ தலைமைத்துவத்தில் காணப்படும் ஒவ்வொரு நபருக்கும் இருக்க வேண்டும். இதன் அர்த்தம் உணர்திறன். இதன் அர்த்தம் கவனித்தல். இதன் அர்த்தம் நீங்கள் வழிநடத்தும் மக்களை கூர்ந்து கவனித்தல் என்பதாகும். இதன் அர்த்தம் அவர்களின் நிலை என்ன, எங்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எங்கு அவர்களின் பலவீனமும், பயங்களும் இருக்கின்றன என்பதை அறிவதாகும்.
கிறிஸ்துவின் சிந்தனையோடு பொருந்தி, வேதத்தை அறிந்த ஒரு நபரால் மனிதனின் அடிப்படை பிரச்சனைகளை சமாளிக்க முடியும். இது உண்மையில்லையென்றால் பிறகு கிறிஸ்தவம் என்பது சொல்லிக்கொள்கிற அளவுக்கு இல்லாமல் போகும். சுவிசேஷம் ஒரு மனிதனை முழுமையாக குணப்படுத்துகின்ற சுவிசேஷமாக இல்லையென்றால் அது சுவிசேஷமாகவே இருக்க முடியாது.
கொடுக்கப்படுகின்ற புத்திமதி, ஆலோசனை, தெளிவு, ஆறுதல், தேறுதல் மற்றும் மெலன் ஆகியவற்றின் நோக்கம் முழு திருச்சபைக்கு கொடுக்கப்படுகிறது, மற்றும் பவுல் விசுவாசிகளை, புத்திச்சொல்லுதலுக்கும், ஆலோசனைக்கும், அறிவுறுத்தவும், அறிவுரை வழங்கவும் ஒருவருக்கொருவர் புத்திச்சொல்லவும் அழைக்கிறார். அனைத்து சாதாரண மக்களும் இவ்வித ஊழியத்தில் ஈடுபடவேண்டும் என்று கிறிஸ்தவம் விரும்புகிறது, ஆனால் அமெரிக்காவில் (நமது நாட்டிலும்) நாம் அதை பெரும்பாலும் இழந்துவிட்டோம். புதிய ஏற்பாட்டில் இல்லாத மதக் குருக்கள் சார்ந்த தலைமைத்துவத்தின் கருத்தை நாம் தவறாக பற்றிக் கொள்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இந்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நாம் ஒருவரையொருவர் கவனிக்கும்படிக்கான வளங்களை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


