What-Is-a-Hermenutic
வேதாகம பொருள் விளக்க படிப்பு என்றால் என்ன?
08-07-2025
How-Is-Jesus-the-Bread-of-Life
இயேசு எப்படிப்பட்ட  ஜீவ அப்பமாக இருக்கிறார்?
15-07-2025
What-Is-a-Hermenutic
வேதாகம பொருள் விளக்க படிப்பு என்றால் என்ன?
08-07-2025
How-Is-Jesus-the-Bread-of-Life
இயேசு எப்படிப்பட்ட  ஜீவ அப்பமாக இருக்கிறார்?
15-07-2025

வெளிப்படுத்தல் இலக்கியத்தை எவ்வாறு படிப்பது?

How-to-Read-Apocalyptic-Literature

வெளிப்படுத்தல் இலக்கியமானது, கடைசிக் காலத்துடன் தொடர்புடைய காட்சிகளையும், போதனைகளையும் உருவகங்களில் நமக்கு காண்பிக்கிறது. ஓர் வேதாகம இலக்கிய சங்கத்தால் உருவாக்கப்பட்ட உறுதியான விளக்கம், வெளிப்படுத்தல் என்பது, “ஒரு கதை அமைப்போடு கூடிய வெளிப்படுத்தப்படும் இலக்கியத்தின் ஓர் வகையாகும், இதில் புரிதலுக்கும் சற்று அப்பாற்பட்ட மேலான காரியங்களை தூதர்கள் போன்ற படைப்புகள் மூலமாக மனிதர்களிடம் வெளிப்படுத்தப்படுகிறது.” என்று கூறுகிறது. வேதாகமத்தின் இந்த தனித்துவமான வெளிப்படுத்தல் புத்தகத்தை இலக்கிய பண்புகளுககு ஏற்ப விளக்குவதற்கு பின்வரும் கொள்கைகள் நமக்கு உதவும்.

1. வெளிப்படுத்தல் இலக்கியமானது, வேத தீர்க்கதரிசனத்தின் ஓர் அங்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெளிப்படுத்தின விசேஷத்தின் இலக்கிய நடை “ஓர் தீர்க்கதரிசனம்” என்பதை அநேக முறை இப்புத்தகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது (வெளி 22:7, 10,18,19). பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசனத்தின் அமைப்பானது, தேவனுடைய மக்களின் நிகழ்கால காரியங்களையும் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய காரியங்களையும் உள்ளடக்கியுள்ளது. அதேபோல், வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசு கிறிஸ்து கர்த்தருடைய நாளில் சபைக்கான வார்த்தைகளையும், கடைசிக் காலத்தில் இயேசுவின் மகிமையான வருகையையும், அதற்கு முந்தைய மற்றும் பின்தொடருகிற நிகழ்வுகளையும் அறிவித்து நித்தியத்தில் முடிவடைகிறது (புதிய வானம் மற்றும் புதிய பூமி). எனவேதான், வெளிப்படுத்தல் சார்ந்த புத்தகங்கள் அநேக உருவகங்களை தன்னில் கொண்டிருந்தாலும், இப்புத்தகங்களை விளக்கப்படுத்துகையில் அதன் வரலாற்று பரிமாணத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

2. அடையாளங்கள் மற்றும் அதன் நிஜ வாழ்க்கையின் குறிப்புகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிந்துக்கொள்ளுங்கள்.

வெளிப்படுத்தல் புத்தகமானது, பெரும்பாலும் கடைசிக்கால நிகழ்வுகளின் காட்சிகளை படங்களாக வியத்தகு முறையில் சித்தரிக்கின்றது. ஆனால் பெரும்பாலும் தரிசனங்கள் உண்மையானவைகளாகவும் மற்றும் ஒரு வரலாற்று நபர் அல்லது நிகழ்வுகள் பற்றி சித்தரிக்கப்படுவதினால், இவைகள் பெரும்பாலும் உருவகங்களாகவே காண்பிக்கப்படுகின்றன. இது, அந்த அடையாளத்துக்கும்  இவைகள் குறிப்பிடும் நபர் அல்லது நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளை  கவனத்தோடு ஆராய நம்மை அழைக்கிறது. 

இதற்கான ஓர் எளிமையான உதாரணம், வெளிப்படுத்தல் 12-13 ல் காண்பிக்கப்பட்டுள்ள வலுசர்ப்பம் மற்றும் ஸ்திரீ ஆகிய இரண்டு நபர்கள். வலுசர்ப்பமானது வலிமையான மிருகமான பிசாசைக் குறிக்கிறது, ஸ்திரீ என்பது திருச்சபையாகிய தேவனுடைய மக்களைக் குறிக்கிறது. வலுசர்ப்பத்தைப் பற்றிய விளக்கம் அந்த வசனத்திலேயே சொல்லப்பட்டுள்ளது: “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது,”. நேரடியாக விளக்கங்கள் கொடுக்கப்படாத நேரத்தில், அந்த அடையாளங்களின் மிகவும் சாத்தியமான விளக்கத்தை மற்ற பகுதிகளோடு முரண்பட்டால் வாசகர்கள் ஆராய்ந்து அறிந்துக்கொள்ள வேண்டும்.

3.கடைசி கால திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அதிகமாக ஆராய்வதின் மூலம் காலத்தைப் போக்காமல் முக்கியமான நோக்கத்தில் கவனம் செலுத்துங்கள்.

நமக்கான சிறந்தவைகளை பெற நமது விருப்பங்களையும், ஆர்வங்களையும் காட்டுவது எளிது, ஆனால் இயேசு தமது சீஷர்களிடம், “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்தில் வைத்திருக்கிற காலங்களையும், நேரங்களையும் அறிகிறது உங்தளுக்கு அடுத்ததல்ல.” என்று கூறினார் (அப் 1:7). மாறாக வெளிப்படுத்தலின் பிரதான நோக்கம், தேவனின் நியாயம் மற்றும் நீதியின் வெளிப்பாடு என்ற இறையியல் சத்தியமாகும். நிச்சயமாக தேவன் விசுவாசிகளை கிறிஸ்துவுக்குள் வெளிப்படுத்தி, அவிசுவாசிகளை நியாயந்தீர்ப்பார். வெளிப்படுத்தல் இலக்கியமானது, உபத்திரவம் மற்றும் பாடுகள் மத்தியில் விசுவாசிகள் வாழ நேரிட்டாலும், நிச்சயமாக தேவன் சகல வரலாற்று நிகழ்ச்சிகளையும் அதன் இறுதி முடிவுக்கு கொண்டுவருவார் என்பதை அவர்களுக்கு வாக்களிக்கிறது. இயேசு மீண்டும் தமது மகிமையில் வருவார், துன்மார்க்கரை நியாயந்தீர்ப்பார், விசுவாசிகளை அவர்கள் என்றென்றும் தேவனின் பிரசன்னத்தில் நித்தியமாக வாழ்வதற்கு கொண்டுச் செல்வார். அதேநேரத்தில், தேவன் துன்மார்க்கர் மனந்திரும்புவதற்கு எல்லா வாய்ப்பையும் அளிக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தல் காண்பிக்கிறது. ஆனால் இறுதியில் அவர்கள் நியாயந்தீர்க்கப்படப்போகிறார்கள் என்பதை தொடர்ந்து நம்ப மறுப்பதினாலே அவர்கள் மனந்திரும்பாமல் வாழ்கிறார்கள்.

4. வெளிப்படுத்தலை, கேனான் என்றழைக்கப்படும் வேத அளவுகோலின்படியும், மீட்பின் வரலாற்றின்படியும் விளக்கப்படுத்தவேண்டும்.

வேதத்தின் அளவுகோலுக்குள் (canon), வெளிப்படுத்தல் புத்தகம் ஓர் முக்கிய செயலாற்றுகிறது. இது வேதத்தின் இறுதி புத்தகத்தை வழங்குகிறது, இது தோட்டத்தில் ஆரம்பித்து நகரத்தில் முடிவடைகிறது. வேதம் ஓர் ஆண், பெண்ணுடன் ஆரம்பித்து, சிங்காசனத்தை சுற்றியிருக்கும் எண்ணிலடங்கா கூட்டத்தில் முடிவடைகிறது. இந்த இரண்டு புத்தக முடிவுகளுக்கும் இடையில், மனிதகுலம் படைத்தவருக்கு எதிராக கலகம் செய்வதை காண்கிறோம், இது “உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக (யோவான் 1:29,36) இயேசுவின் முதல் வருகையில் நிகழும் ஒரு மாபெரும் மீட்பின் திட்டத்தைக் காண்பிக்கிறது. ஜாதிகளுக்கு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட கால ஊழியத்துக்குப் பிறகு, வெளிப்படுத்தின விசேஷம், மகிமையான வெற்றிகரமான இரண்டாம் வருகையில் வரும் இயேசுவை “யூதா கோத்திரத்தின் சிங்கமாக” சித்தரிக்கிறது (வெளி 5:5). 

பூமியின் அழிவின் முடிவை வண்ணமயமான காட்சிகளோடு ஒரு வகையான அணுசக்தி பேரழிவாக காட்டுவதற்கு பதிலாக, வெளிப்படுத்தல் புத்தகம், தேவன் தம் மக்களோடு கொண்டுள்ள உடன்படிக்கை வரலாற்றின் பூரண முடிவடைதலைக் காண்பிக்கிறது. ஆகவே, இப்புத்தகத்தின் இறுதியில் உள்ள அறிவிப்பு பொருத்தமான முடிவாக உள்ளது: “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன், அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார், அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.”  வெளிப்படுத்தினத விசேஷம் 21:3.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஏ. ஜே. கோஸ்டன்பெர்கர்
ஏ. ஜே. கோஸ்டன்பெர்கர்
ஆண்ட்ரியாஸ் கோஸ்டன்பெர்கர் புதிய ஏற்பாடு மற்றும் பைபிள் இறையியலின் ஆராய்ச்சிப் பேராசிரியராகவும், மிட்வெஸ்டர்ன் பாப்டிஸ்ட் இறையியல் கருத்தரங்கில் பைபிள் படிப்புகளுக்கான மையத்தின் இயக்குநராகவும் உள்ளார். வீடு, தேவாலயம் மற்றும் சமூகத்தில் பைபிள் அடித்தளங்களுக்குத் திரும்புவதை வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பான பைபிள் அறக்கட்டளைகளின் நிறுவனர் ஆவார்.