சீர்திருத்த சத்தியத்தில் தைரியம்கொள்
21-11-2024புரட்டஸ்தந்துகளின் கொள்கைகளில் மிக பிரதானமான தவறான கொள்கை எது?
28-11-2024சுவிசேஷம் என்றால் என்ன?
அநேக கிறிஸ்தவர்கள், சபைகள், மற்றும் ஸ்தாபனங்கள் சுவிசேஷம் என்ற வார்த்தையை தாங்கள் எதை நம்புகிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இந்த சுவிசேஷம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை யார் உண்மையாக பிரசங்கிக்கிறார்கள் என்பதை குறித்ததான இறையியல் ரீதியான தர்க்கங்களும் ஒரு பக்கம் சென்ற வண்ணமாகவே இருக்கின்றன. மிகவும் பிரபலமான இந்த சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தான் என்ன? இந்த கேள்விக்கான சிறப்பான பதிலை நாம் அறிய வேண்டுமென்றால் வேதத்திற்கே நாம் திரும்ப வேண்டும்.
கிரேக்க மொழியின் புதிய ஏற்பாட்டில், ‘euangelion'(சுவிசேஷம்) என்ற பெயர் சொல்லானது 70 முறை இடம் பெற்றுள்ளது. இந்த சுவிசேஷம் என்ற வார்த்தையானது அடிக்கடி வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது நாம் எல்லாரும் அறிந்திருந்தாலும், ஒரு கண்ணோட்டத்தில் முழு புதிய ஏற்பாடுமே சுவிசேஷத்தை பற்றியது தான். இதையும் தாண்டி ஆச்சரியப்படத்தக்க காரியம் என்னவென்றால் புதிய ஏற்பாட்டு புத்தகங்களை எழுதின ஆக்கியோன்கள் இந்த சுவிசேஷம் என்ற வார்த்தையை வெவ்வேறு விதமாக பயன்படுத்தி இருப்பதுதான். அப்போஸ்தலனாகிய பவுல், இந்த வார்த்தையை மூன்று பதங்களில் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார் அதுவும் மற்ற ஆசிரியர்கள் பயன்படுத்திய விதத்தையும் ஒன்றிணைத்திருக்கிறார். இந்த வார்த்தையை மத்தேயுவும், மாற்க்கும் ஒருவிதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள், வேறு சில ஆக்கியோன்களும், லூக்கா, யோவான், பேதுரு மற்றும் யாக்கோபு இவர்களும் இந்த வார்த்தையை வெவ்வேறு பதங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு நற்செய்தி என்று எளிமையாக பொருள் கொள்ளலாம். கிறிஸ்தவ பிரசங்க செய்திகளில் இந்த வார்த்தை அரிதான ஒன்றல்ல. ஆனால் புற ஜாதிகள் மத்தியில் இந்த வார்த்தை நல்ல செய்தியைக் குறித்ததான ஒரு விளம்பர அறிக்கையாக காணப்படும். புதிய ஏற்பாட்டில் நற்செய்தி என்று சொல்லும் பொழுது அது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறதாயிருக்கிறது. ஆதி திருச்சபைகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தும்போது அதனுடைய அர்த்தத்தை நன்றாக புரிந்து கொண்டே பயன்படுத்துகிறார்கள் என்று அடிக்கடி அநேகரால் என்னப்படுவதும் உண்டு.
புதிய ஏற்பாட்டில் சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு வலு சேர்க்கக்கூடிய அநேக காரியங்களை நாம் சற்று ஆராய்வோம்.
வேதத்தில் முதலாவது ‘தேவனுடைய சுவிசேஷம்’ என்ற வார்த்தையை நாம் அடிக்கடி காண முடிகிறது. இந்த சொல்லானது சுவிசேஷத்தினுடைய மூலக்கூறு தேவனுடைய ஈவாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. சுவிசேஷம் தெய்வீகமானது, தேவனுக்குரியது, அது மனித சிந்தையில் தோன்றின ஒன்றல்ல.
இரண்டாவது,சுவிசேஷத்தினுடைய பண்பு அல்லது குணாதிசயமானது பல்வேறு வழிகளில் விவரிக்கப்பட்டிருக்கிறதை பார்க்க முடிகிறது. சுவிசேஷமானது உண்மையுள்ளது, (கலா2:5-14 , கொலோ1:5) கிருபை உள்ளது,(அப்போ20:24) மற்றும் மகிமையானது (2கொரி 4:4 , 1தீமோ1:11).
மூன்றாவதாக, சுவிசேஷத்தை விளக்க பயன்படுத்தப்படும் இரண்டு மறுமொழிகளை பார்க்கிறோம். முதலாவது மறுமொழி, விசுவாசம் (அப்போ15:7 , எபே1:13) அதேசமயம் கீழ்ப்படிதலும் சுவிசேஷத்தினுடைய மறுமொழியே (1பேது4:7 , ரோமர்1:5 , 10:16 , 2தெசோ1:8). அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் விசுவாசத்தினால் வரும் கீழ்ப்படிதல் என்ற பதத்தை மிக முக்கியமான மூலக்கூறாக தன்னை நியாயப்பிரமாணத்துக்கு எதிரானவன் என்று குற்றம் சாட்டின கூட்டத்தாருக்கு விரோதமாக அந்த பதத்தை பயன்படுத்துகிறார்.
நான்காவதாக, சுவிசேஷத்தினுடைய பலாபலன்களை பார்க்கலாம். உண்மைதான் சுவிசேஷம் இரட்சிப்பைக் கொண்டு வருகிறது. (ரோம1:16 , எபே1:13) மட்டுமல்ல தேவனுடைய ராஜ்யத்தை நமக்கு கொடுக்கிறது (மத்தே4:23 , 9:35 , 24:14). மற்றும் அது தேவனுடைய ஜனங்களிடத்தில் நம்பிக்கையை கொடுக்கிறதாயிருக்கிறது (கொலோ1:23). சுவிசேஷம் விசுவாசிகளிடத்தில் பரிசுத்தத்தை ஊக்குவிக்கிறதாய் இருக்கிறது (மார்க்8:35 , 10:29 , 2 கொரி9:13 , எபே6:15 , பிலி1:27).
இந்த மேற்சொல்லிய நான்கு வழிகளின் மூலமாகவும் சுவிசேஷம் என்ற வார்த்தையினுடைய பொருளடக்கத்தை வேதத்தில் நாம் பார்க்கலாம். புதிய ஏற்பாட்டிலும் அநேக பகுதிகளில் இந்த சுவிசேஷத்தினுடைய பொருளடக்கம் நன்றாக விளக்கி காட்டப்பட்டிருக்கிறது. இவ்விதமான வேத பகுதிகளை நாம் ஆராய்ந்து பார்க்கும் பொழுது சுவிசேஷமானது மிகவும் விஸ்தாரமான முறையில், கிறிஸ்துவின் மூலமாக, அவர் தன்னுடைய ஜனங்களுக்கு கொடுக்கிற இரட்சிப்பையும், புதிய வாழ்க்கையையும், அதனுடைய எல்லா காரியங்களையும் உள்ளடக்கியதாக நம்மால் பார்க்க முடிகிறது. சில பகுதிகளில் மிகவும் குறுகியதாக, நம்மை சார்ந்து அல்லாமல் இயேசுவானவர் நமக்காக என்ன செய்து முடித்தார் என்பதோடு தொடர்புடையதாய் இருக்கிறது. சுவிசேஷம் என்ற வார்த்தையை மற்ற சில பகுதிகளோடு நாம் பார்க்கும் பொழுது, இயேசு தம்முடைய ஜனங்களை எவ்வாறு நீதிமான்களாக்கி பரிசுத்தப்படுத்துகிறார் என்றும், சில பகுதிகளில் விசுவாசத்தினால் எப்படி ஒரு பாவியை இயேசு நீதிமானாக்குகிறார் என்பதும் கூட சுவிசேஷத்தோடு தொடர்புடையதாய் இருக்கிறது. இன்னும் மற்றொரு வகையில் இதை நாம் பார்ப்போமானால் சுவிசேஷம் என்ற வார்த்தையானது பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட மேசியாவைக்குறித்த வாக்குத்தத்தமானது புதிய ஏற்பாட்டில் எவ்வாறு நிறைவேறி முடிகிறது என்றும், இன்னும் சில பகுதிகளில் சுவிசேஷமானது நாம் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக இயேசு நமக்காக நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை நிறைவேற்றுவதற்கு என்ன செய்தார் என்ற பார்வையோடு கூட விஸ்தரிக்கப்படுகிறது.
சுவிசேஷம் என்ற வார்த்தையினுடைய பரந்த சிந்தனையை மாற்கு ஒன்றாம் அதிகாரம் 1 ஆம் வசனத்தில் “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்” என்று ஆரம்பிக்கிறதை பார்க்கிறோம். இங்கே மாற்கு தன்னுடைய புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியத்தையும், பணியையும், பிரசங்கத்தையும் குறித்து விஸ்தரிக்கும் அனைத்து காரியங்களையும் உள்ளடங்கிய ஒன்றாகவே சுவிசேஷம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறதை பார்க்கிறோம்.
இதேபோன்று வெளிப்படுத்தின விசேஷம்14:6,7 ஆம் வசனத்தில் “பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்க கண்டேன். அவன் பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜன கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாய் இருந்து மிகுந்த சத்தமிட்டு தேவனுக்கு பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள். அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேலை வந்தது வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும் உண்டாக்கின வரையே தொழுது கொள்ளுங்கள் என்று கூறினான்”, என்ற வசனத்தில் இருந்தும் சுவிசேஷத்தை பரந்த சிந்தனையோடு அறிவிப்பதை பார்க்கிறோம்.
இங்கே சுவிசேஷமானது தேவனிடம் மனந்திரும்பி அவரை ஆராதிக்கும்படியான அழைப்பை குறிக்கிறதாயிருக்கிறது.
பெரும்பாலும் சுவிசேஷம் என்ற வார்த்தையானது அனேக இடங்களில் குறிப்பிட்ட, சிறப்பான காரியங்களை உள்ளடக்கியதாகவே கூறப்படுகிறது. இதை 1 கொரி 15:1-4 இல் பார்க்கிறோம்.
“அன்றியும் சகோதரரே, நான் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக் கொண்டு அதிலே நிலைத்திருக்கிறீர்கள் நான் உங்களுக்கு பிரசங்கித்த பிரகாரமாய் நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால் அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். மற்றபடி உங்கள் விசுவாசம் விருதாவாய் இருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்கு பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி, நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.”
இங்கே சுவிசேஷமானது பாவிகளுக்கு இரட்சிப்பை அருளும் இயேசுவினுடைய மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் பற்றிய செய்தியை குறிக்கிறதாயிருக்கிறது.
சுவிசேஷத்தினுடைய மூலக்கூறானது தேவனிடத்தில் இருந்து பெறப்பட்ட ஈவாகும். சுவிசேஷம் தெய்வீகமானது, அது மனிதனுடைய சிந்தனையில் தோன்றின ஒன்றல்ல.
மற்றொரு இடத்திலே அப்போஸ்தலனாகிய பவுல், “நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷமானது, எனக்கு ஒப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று ஆரம்பித்து சுவிசேஷத்தை கீழ்க்கண்ட வசனத்திலிருந்து விஸ்தரிப்பதை பார்க்க முடிகிறது 1தீமோ 1:11,15-16.
“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களின் பிரதான பாவி நான். அப்படி இருந்தும் நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசு கிறிஸ்துவின் இடத்தில் விசுவாசமாய் இருப்பவர்களுக்கு திருஷ்டாந்தம் உண்டாகும் பொருட்டு பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம் பெற்றேன்,” என்று சுவிசேஷத்தை விளக்குகிறார். இங்கே சுவிசேஷமானது பாவிகளுடைய மீட்புக்காக கிறிஸ்துவினுடைய பணியை குறிப்பதாக அமைகிறது.
இதேபோன்று பவுல் 2 திமோ1:8-10, ஆகிய வசனங்களில்
“ஆகையால் நம்முடைய கர்த்தரை பற்றிய சாட்சியை குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடே கூட தீங்கு அனுபவி. அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகால முதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியும் நம்மை இரட்சித்து பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்த கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது. அவர் மரணத்தை பரிகரித்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.” மற்றும் 1தீமோ 2:8 ல் “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசு கிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர் என்று நினைத்துக்கொள்.” போன்ற வசனங்களின் மூலமாக சுவிசேஷத்தை விளக்கப்படுத்துகிறார்.
சுவிசேஷத்தை இப்படி குறுகிய விதத்தில் 16ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளும் பயன்படுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது. ஜான் கால்வினுடைய சிந்தனைகளிலிருந்து சில பின்வருமாறு,
“விசுவாசம் என்ற வார்த்தையானது அதோடு தொடர்புடைய வாக்குத்தத்தம் என்ற பெயரோடு இணைக்கப்பட்டிருக்கிறது . அதுவே சுவிசேஷமாகவும் இருக்கிறது. ஏனென்றால் சுவிசேஷம் விசுவாசத்தோடு தொடர்புடையதாய் இருக்கிறது. சுவிசேஷத்திற்கும் நியாயப்பிரமாணத்துக்கும் உள்ள முரண்பாடுகளையும் நாம் நன்கு ஆராய வேண்டும். நியாயப்பிரமாணமானது கிரியைகளை நிர்பந்திக்கிறது என்றும், சுவிசேஷமானது தேவனுடைய கிருபையைப் பெற்றுக் கொள்வதற்கு விசுவாசம் மட்டுமே அவசியம் என்றும் நிர்பந்திக்கிறதை சரியாக நாம் புரிந்து கொள்ள முடியும்.”
அதே போன்று சகரியாஸ் உர்சினஸ், தன்னுடைய விசுவாச விளக்க உரையின் துவக்கத்தில், எல்லா இறையியல் கொள்கைகளையும் சுவிசேஷம் மற்றும் நியாயப்பிரமாணம் போன்றவற்றில் அடங்கியுள்ளதாக பிரித்தே விளக்கியிருக்கிறார்.
“திருச்சபையை பற்றினதான இறையியல் கொள்கையானது, இரண்டு காரியங்களை கொண்டுள்ளது, ஒன்று சுவிசேஷம், மற்றொன்று நியாயப்பிரமாணம். பரிசுத்த வேதாகமத்தினுடைய சத்தியங்கள் அனைத்தும் ஒன்று நியாயபிரமாணத்தையோ அல்லது சுவிசேசத்தை உள்ளடக்கி கூறுகிறது. நியாயப்பிரமாணம் என்பது 10 கட்டளைகளையும், சுவிசேஷம் என்பது கிறிஸ்து ஒரு மத்தியஸ்தராக பாவங்களிலிருந்து விசுவாசத்தின் மூலமாக நம்மை இலவசமாக மீட்பதையும் பற்றின இறையியலை விளக்குகிறது.”
சுவிசேஷத்தை பற்றினதான இவ்விதமான விளக்கங்களே சீர்திருத்த இறையியலிலும் பரவலாக காணப்படுவதை டச் இறையியலாளர் ஹெர்மன் பாவிங்க் விளக்குவதை கீழ்கண்ட வார்த்தைகளிலிருந்து காணலாம்.
“தேவனுடைய வார்த்தையிலுள்ள நியாயப்பிரமாணம் மற்றும் சுவிசேஷம் என்ற வார்த்தைகள் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தமாக இருக்கிறது. அது கிரியையின் உடன்படிக்கையையும், கிருபையின் உடன்படிக்கையையும் பிரகடனப்படுத்துகிறதாயிருக்கிறது. இன்னும் விஸ்தாரமாக பார்ப்போமானால் நியாயப்பிரமாணம் மற்றும் சுவிசேஷம் இரண்டுமே கிருபையின் உடன்படிக்கையை விஸ்தரிக்ககூடிய தேவனுடைய பழைய மற்றும் புதிய இறையாண்மையே ஆகும். அதை நாம் நுணுக்கமாக பார்க்கும் பொழுது நிச்சயமாகவே இரண்டும் வெவ்வேறு தனித்தன்மையான, தெய்வீக சித்தத்தினுடைய வெளிப்பாடாக இருக்கிறது. (இங்கே ஹெர்மன்பயன்படுத்திய வேத ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது நியாயப்பிரமாணம் மற்றும் சுவிசேஷம் இரண்டும் முரண்பட்ட ஒன்றுதான்) எப்படி என்றால், ஒன்று கோரிக்கை மற்றொன்று ஈவு, கட்டளை மற்றும் வாக்குத்தத்தம், பாவம் மற்றும் கிருபை, வியாதி மற்றும் சுகம், மரணம் மற்றும் வாழ்வு, நியாயப்பிரமாணம் தேவனுடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்துகிறது, சுவிசேஷமானது தேவனுடைய கிருபையை வெளிபடுத்துகிறது, நியாயப்பிரமாணமானது தேவனுடைய பொதுவான வெளிப்பாடு, சுவிசேஷமானது சிறப்பான வெளிப்பாடு. நியாயப்பிரமாணமானது நீதியை பூரணமாக எதிர்பார்க்கிறது, ஆனால் சுவிசேஷம் அந்த நீதியை தருகிறதாயிருக்கிறது. நியாயப்பிரமாணம் கிரியைகளினாலே ஜனங்களை நித்திய ஜீவனுக்கு நேராக வழி நடத்துவதாக எண்ணப்படுகிறது, சுவிசேஷம் விசுவாசத்தின் மூலமாக வரக்கூடிய நித்திய ஜீவனுக்கான நற்கிரியைகளை உண்டாக்குகிறதாயிருக்கிறது. நியாயப்பிரமாணமானது மக்களை ஆக்கினைக்குள்ளாக்குகிறது, சுவிசேஷமானது ஆக்கினையிலிருந்து விடுவிக்கிறது. நியாயப்பிரமாணமானது எல்லாருக்கும் கொடுக்கப்படுகிற ஒன்று, சுவிசேஷமானது அதை விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று.”
இங்கே எவ்வளவு தெளிவாக, வேதபூர்வமான, விலையேறப்பெற்ற சுவிசேஷத்தினுடைய காரியங்கள் விளக்கப்படுத்தப்பட்டு காண்பிக்கப்படுகிறது.
சபையானது இந்த சுவிசேஷத்தை பற்றிய பரந்த சிந்தனையிலும், குறுகிய பார்வையிலும் தெளிவாக பிரசங்கிக்க கடமைப்பட்டுள்ளது. கிரேக்க வார்த்தையில் சுவிசேஷமானது, ஆங்கிலம் பேசும் உலகத்தில் இவாஞ்சலிசம் என்ற நற்செய்தியை பரப்புபவர்கள் என்ற வார்த்தையோடு உபயோகப்படுத்துகிறது. உண்மையான சுவிசேஷம் என்பது, கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய கட்டளையான (Great Commission), மத்தேயு 28:18-20 வசனங்களின் அடிப்படையில், கிறிஸ்துவின் சீஷர்களை உருவாக்குபவர்களே உண்மையான நற்செய்தியாளர்களாக எண்ணப்படுகிறார்கள். இதை நாம் குறுகிய சிந்தனையோடு பார்க்கும் பொழுது, முதலாவதாக, எல்லா ஆண்களையும் பெண்களையும் இயேசுவை விசுவாசிக்கும்படியான அழைப்பை கொடுக்கிறது. இரண்டாவது, பறந்த சிந்தனையில் கிறிஸ்து சொல்லிய எல்லாவற்றையும் அவர்களுக்கு கற்பித்து, அவர்களை சீஷராக்குவதாகும். கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் நிமித்தமாக, வேதம்போதிக்கும் உண்மையான நற்செய்தியை உலகம் முழுவதும் நாமெல்லோரும் பறைசாற்றுவோம்.