21-10-2025

ஆத்தும இளைப்பாறுதல்

கிறிஸ்துவின் மிகவும் விலையேறப்பெற்ற வாக்குறுதிகளில் ஒன்று, அவர் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலை அளிப்பவர் என்பதுவே. பிரசித்திபெற்ற திருச்சபை பிதாவான அகஸ்டின், "தேவனே, நீர் எங்களை உமக்காகவே உண்டாக்கினீர், எங்கள் இருதயங்கள் உம்மில் இளைப்பாறுதல் அடையும்வரை அதற்கு இளைப்பாறுதல் இல்லை" என்று தமது விசுவாச கோட்பாடு (The Confessions) என்ற நூலில் எழுதியிருக்கிறார். இந்த இளைப்பாறுதலின் தேவையைப் பற்றியே இயேசு இவ்விதமாக குறிப்பிடுகிறார்: