13-11-2025
தனது ஜெபவாழ்வில் முழுமையாய் திருப்தியடைந்த ஒரு கிறிஸ்தவனை இதுவரை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். இந்த அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம்: நீங்கள் ஜெபிக்க முயற்சிக்கிறீர்கள் ஆனால் உங்களுடைய வார்த்தைகள் உங்களின் மேற்கூறையை அடைவதற்கு முன்பாகவே சிதறி போவதை போல உணர்கிறீர்கள், தேவன் எனது வார்த்தைகளை கேட்கிறாரா அல்லது நான் என்னோடு கூட பேசிக் கொண்டிருக்கிறேனா? என்று நீங்கள் யோசிக்க தொடங்குகிறீர்கள்.
