Who Wrote the Bible?
வேதத்தை யார் எழுதியது? 
25-11-2025
Who Are the “Sons of God” in Genesis 6?
ஆதியாகமம் 6 ல் சொல்லப்பட்ட “தேவகுமாரர்” யார்? 
02-12-2025
Who Wrote the Bible?
வேதத்தை யார் எழுதியது? 
25-11-2025
Who Are the “Sons of God” in Genesis 6?
ஆதியாகமம் 6 ல் சொல்லப்பட்ட “தேவகுமாரர்” யார்? 
02-12-2025

பரதேசியான கிறிஸ்தவ வாழ்க்கை 

The Christian Life as Pilgrimage

உண்மையான வீரத்தைக் காண விரும்புவோர் இங்கு வரட்டும்;  என்றும் நிலைத்திருக்கக் கூடியவர் இங்கே இருப்பார், 

காற்று வரட்டும், பனியும் வரட்டும். 

அவரை எதுவும் தளரச் செய்யாது, 

ஒரு பரதேசியாக இருக்க வேண்டும் 

என்னும் நோக்கமே அவருடைய முதலாவது பிரகடனமாகும்.

அரை நூற்றாண்டுக்கு முன்பு, நான் பள்ளி கூடுகையில், ரால்ப்  வாஹான் வில்லியம்ஸ் (Ralph Vaughan Williams) இசையமைத்த இந்தப் பாடலை பாடினேன். இந்தப் பாடல் வரிகள், ஜான் பனியன் எழுதிய  மோட்சப் பிரயாணம் (The Pilgrim’s Progress) பகுதி 2-ல், திரு. வீரமுள்ள-சத்தியவானின் (Mr. Valiant-for-Truth) சாட்சியுள்ள வாழ்க்கையின் ஒரு பகுதியாக வருகின்றன. முன்னதாக, வீரமுள்ள சத்தியவான் தன்னை திரு. மகத்தான-இருதயம் (Mr. Great-heart) மற்றும் அவருடைய தோழர்களிடம், “நான் ஒரு பரதேசி, மேலும் பரலோக ராஜ்ஜியத்தை நோக்கி பயணம்  போய்க்கொண்டிருக்கிறேன்” என்ற வார்த்தைகளுடன் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

எல்லாக் கிறிஸ்தவர்களும் பரலோக ராஜ்ஜியத்தை நோக்கி பயணம் செல்லும் மேலோகவாசிகளே.

பனியன் தான் நேசித்த வேதாகமத்தையே பிரதிபலித்தார். கிறிஸ்தவர்கள் யாவரும் பரதேசிகளே என்று வேதாகமம் உறுதிப்படுத்துகிறது. நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுடன் செய்யப்பட்ட முன்மாதிரியான உடன்படிக்கையில், தேவன் கானானை  “சுதந்திரமாக கொடுப்பேன் ” என்று அவனுக்கு வாக்களித்தார் (ஆதி. 17:8). மேலும் புதிய ஏற்பாட்டில், பேதுரு தன்னுடைய நிருபத்தில் “தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு” என்று கூறுவதன் மூலம் இதே கருத்தை வெளிப்படுத்துகிறார் (1 பேதுரு 1:1; ஒப்பிடுக. 1:17,  “நீங்கள் பரதேசிகளாய் சஞ்சரிக்குமளவும்”). அதேபோல எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், பழைய ஏற்பாட்டு சரித்திரத்தில் உண்மையுள்ள விசுவாசிகளை பற்றி விளக்கப்படுத்தும்போது, அவர்களை “அந்நியர்களும் பரதேசிகளும்” என்று குறிப்பிடுகிறார் (எபி. 11:13).

கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு சாலையில் நீண்டபயணம் செய்வதை போன்றது, இது மிகவும் உற்சாகமான பயணமாகும். இதற்கு ஒரு தொடக்கப் புள்ளியும் ஒரு முடிவும் உண்டு. இது நகர்ந்து செல்வதின் ஒரு உருவகமாகும். கிறிஸ்தவர்கள் ஓரிடத்தில் அதிக நேரம் தங்குவதில்லை, ஏனெனில் அவர்கள் வேறொரு இடத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள். ஆரம்பகால கிறிஸ்தவர்கள்  “ஒரு குறிப்பிட்ட வழி”யைப் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வேறு பாதையைப் பின்பற்றத் தீர்மானித்தவர்கள் என்பதையே அது பிரதிபலிக்கிறது  (அப். 9:2; 24:14).

இதில் பல விஷயங்கள் நம்மக்கு எழும்புகின்றன. முதலாவதாக, இது ஒரு விடாமுயற்சியான சாகசமாக எண்ணப்படுகிறது. ஆம், சாகசம்தான். தி ஹாபிட் (The Hobbit) என்ற கதையில் பில்போ பேகின்ஸ் (Bilbo Baggins) ஆரம்பத்தில் சாகசத்தைத் தவிர்த்தார், ஏனெனில் அது ஷையரில் (Shire) அவர் வழக்கமான வாழ்க்கை முறையின் சமநிலையைக் குலைத்தது. ஆனால் அவர் பின்னர் தன்னுடைய அசாதாரண பயணத்தில் சென்று மீண்டும் வந்த கதைகள் (There and Back Again) என்ற துணைத் தலைப்புடன் ஒரு மூச்சடைக்க வைக்கும் கதையாகப் பதிவு செய்தார்.

கிறிஸ்தவர்கள் சற்று வித்தியாசமான பயணத்தை நாடி செல்கிறார்கள்  – ஒருவேளை இங்கிருந்து அங்கே (Here to There) என்று குறிப்பிடலாம். ஆனால் அது, வீரம் மற்றும் ஆபத்து நிறைந்த கதைகளைப் போல சமமான உற்சாகமான, பயணம்தான். கிறிஸ்தவ வாழ்க்கையிலும் உற்சாகம் என்ற ஒன்று இருக்கிறது. தேவனுடைய நோக்கம், தேவனுடைய இடைபடுதல் மற்றும் இரட்சிப்பின் புதிய பார்வைகள் ஒவ்வொரு திருப்பத்திலும் நமக்காக காத்திருக்கின்றன. ஒரு நாள் நமக்கு என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது (நீதி. 27:1), ஆனால் நம்முடைய பரலோக பிதாவின் சித்தமின்றி எதுவும் நடக்காது என்று நாம் உறுதியாக நம்பலாம். பசும்புல்வெளிகளிலும், அமர்ந்த தண்ணீர்கள் அருகிலும், அத்துடன் எதிரிகளின் முன்னிலையிலும், மரண இருளின் பள்ளத்தாக்கிலும் கூட (சங். 23), அவர் நம்மை எங்கு வழிநடத்தினாலும், எப்பொழுதும் நம்முடைய எஜமானரைப் பின்பற்ற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நான் இப்போது ஊழியம் செய்யும் சபையில் எனது நண்பரும், எனக்கு முன்னிருந்தவருமான, டேபிள்டாக் (Tabletalk) மாத இதழ் வாசகர்களுக்குப் நன்கு பழக்கமான பெயரான சின்கிளேர் பெர்குசன் (Sinclair Ferguson), பெரும்பாலும் தன்னுடைய பிரசங்கங்களை “கிறிஸ்தவராக இருப்பது ஆச்சரியமல்லவா!” என்ற ஆச்சரியக்குறியுடன் முடிப்பது வழக்கமான ஒன்று. ஆம், இது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம் தான். ஒவ்வொரு நொடியும் ஒரு உற்சாகமான சாகசமாகும்.

இரண்டாவதாக, இந்த உலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை நம்முடைய பயணம் வெளிப்படுத்துகிறது. “இங்கே நமக்கு நிலையான நகரம் இல்லை, வரவிருக்கிற நகரத்தையே நாம் நாடுகிறோம்” (எபி. 13:14). “காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள்” (2 கொரி. 4:18). இந்த வாழ்க்கை “நிலையற்றது” என்று சொல்லும்போது அது எதைக் குறிக்கிறது?. புதிய ஏற்பாட்டில் “இப்பொழுது” (now) மற்றும் “இன்னும் வரவில்லை” (not yet) என்னும் இரண்டு முக்கியமான பதங்களுக்கிடையே  அதற்கான பதில் அடங்கியிருக்கிறது. கிறிஸ்தவர்களோ, “உலகத்தின் முடிவு காலத்தில் இருப்பவர்கள்” (1 கொரி. 10:11). வரவிருக்கும் உலகத்தின் ஏதோவொன்று ஏற்கனவே நம்முடைய தற்போதைய காலத்தின் நிகழ்வுகளில் ஊடுருவி, நம்மை வேறொரு இராஜ்யத்தின் குடிமக்களாக உரிமைகோருகிறது (பிலி. 3:20) என்பதைப் போன்றது.

இவ்விதமான  கண்ணோட்டம் அடிப்படையான சில குழப்பங்களை உருவாக்குவதைப்போல் தோன்றலாம். ஒருவிதத்தில், இந்த உலகின் குடிமக்களாகப் பல்வேறு பொறுப்புகளுடன் நாம் இங்கே வாழ்கிறோம். உலகத்தைவிட்டு ஒதுங்கி வாழும் மற்றும் விலகியிருக்கும் வாழ்க்கை ஒரு வேதாகம கண்ணோட்டம் அல்ல. இந்த விசித்திரமான வாழ்க்கையை குறித்ததான பார்வை, சீமோன் ஸ்தைலைட்ஸ் தி எல்டர் (Simeon Stylites the Elder) என்ற மனிதரால் கேலி செய்யப்பட்டது. இவர் கி.பி. 423-ல் சீரியாவில் ஒரு கம்பத்தில் ஏறி, முப்பத்தேழு ஆண்டுகள் அங்கேயே இறக்கும்வரை இருந்தார். இது கிறிஸ்தவத்தை மறுப்பதேயல்லாமல் அதை உறுதிப்படுத்தும் செயலல்ல.

கிறிஸ்தவர்கள் சமுதாயத்தோடு பிணைந்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் சமுதாயத்தை மறுவடிவமைக்கிறார்கள். அவர்கள் இருளுள்ள இடங்களில்  ஒளியாக இருக்கிறார்கள். ஒரு புதிய தெய்வீக அன்பு கிறிஸ்தவர்களை ஆட்கொண்டிருப்பதினால், உலகத்திலுள்ள  மற்ற எல்லாவற்றையும் அற்பமாகவும், பயனற்றதாகவும் எண்ணும்படி செய்கிறது. தாமஸ் சால்மர்ஸின் (Thomas Chalmers) வார்த்தைகளில், கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு “புதிய அன்பினால் வெளியேற்றப்படும் வல்லமையினால் (expulsive power of a new affection) ஒளிரூட்டப்படுகிறது” என்கிறார்.

இந்த மோட்ச பயணத்தின் மூன்றாவது அம்சமானது ஒரு குறிப்பிட்ட திசையை குறித்ததான ஆழமான உணர்வு, ஒரு இலக்கு மற்றும் ஒரு முற்றுப்புள்ளி போன்றவையாகும். இந்த பயணத்திற்கு ஒரு இலக்கு உள்ளது. கிறிஸ்தவம் ஒரு சமாதானத்தை (shalom), ஒரு முழுமை மற்றும் திருப்திகரமான உணர்வை கொடுக்கிறது. கிறிஸ்தவர்கள் தாங்கள் யார், எங்கே போகிறவர்கள் என்பதை நன்கு அறிவார்கள். கிறிஸ்து இல்லாத ஒரு வாழ்க்கையின் பெரும்பகுதியானது, எந்தவிதமான இலக்கும் இல்லாமல் தள்ளாடுவதே அதன் அம்சமாகும்.

கிறிஸ்தவர்கள் “காணப்படாதவைகளை” “நோக்கியிருக்கிறார்கள்” 

(2 கொரி. 4:18, இங்கே “நோக்கி” என்ற கிரேக்க வினைச்சொல் ஒரு தீவிரமான, நிலையான பார்வையை அறிவுறுத்துகிறது). இது ஒரு முரண்பாடு போல் தெரிகிறது: காண முடியாத ஒன்றையே நாம் பார்க்கிறோம். நமக்கான மகிமை காத்திருக்கிறது.மேலும் கிறிஸ்தவர்களான பரதேசிகள் முன்னோக்கிப் பார்ப்பதில் ஒரு நிலையான,  தீர்மானிக்கப்பட்ட உறுதிப்பாட்டோடு செயல்படுகிறார்கள். நமக்கு முன்னாக வைக்கப்பட்டிருக்கும் மகிமையானது, நம்முடைய பார்வையை  மெருகேற்றி, நம்மை எதிர்பார்ப்புடன் செயல்பட வைக்கிறது. நமக்கு முன்னால் இருப்பது நம் சிந்தனையை ஆட்கொண்டு, நம்மை ஆவலுடன் இருக்கச் செய்கிறது. நிலைத்து நிற்கும் பரதேசிகளுக்காகக் காத்திருக்கும் நன்மைகளோ, நாம் எதிர்பார்ப்பதை விடப் பெரியவை; வார்த்தைகளால் அவை ஒருபோதும் விவரிக்க முடியாதவையாகும். 

“முன்னோக்கி மற்றும் மேல்நோக்கி! நார்னியாவுக்கும் வடக்கிற்கும்!” என்பது சி. எஸ். லூயிஸின் நார்னியா கதையான தி ஹார்ஸ் அண்ட் ஹிஸ் பாய் (The Horse and His Boy) என்பதில் உள்ள ஒரு கூற்றாகும். சிலுவையின் எல்லா பரதேசிகளும்  முன்னோக்கி மற்றும் மேல்நோக்கி செல்வதை விசுவாசத்துடன் ஒப்புக் கொள்ளுகிறார்கள்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டெரெக் தாமஸ்
டெரெக் தாமஸ்
Dr. டெரெக் WH தாமஸ் லிகனியர் ஊழியத்தில் ஓர் ஆசிரயராவார் மற்றும் Reformed theological கல்லூரியின் முறைப்படுத்தப்பட்ட மற்றும் போதக இறையியலின் பேராசிரியாராவார். லிகனியர் கற்பித்தல் தொடரான ரோமர் 8 ன் ஆசிரியராகவும், Heaven on earth, strength for the weary மற்றும் Let us worship God போன்ற புத்தகங்களின் ஆசியராவார்.