
இயேசுவைப் போல் சிந்தித்தல்
23-12-2025பிரசங்கம் மற்றும் போதித்தல்
பதினாறாம் நூற்றாண்டில் புரோட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின்போது சுவிசேஷத்தை மீட்டெடுப்பதில் கருவியாக இருந்த மார்ட்டின் லூதர் மற்றும் ஜான் கால்வின் போன்றோர் மீது கடந்த பல ஆண்டுகளாக எனக்கு இருக்கும் பற்றுதலை நான் இரகசியமாக வைக்கவில்லை. அவர்களுடைய உயர்ந்த புத்திக்கூர்மையையும் மற்றும் பல ஆபத்துகளுக்கு மத்தியில் உறுதியாக நிற்கும் அவர்களுடைய திறமையையும் கண்டு நான் வியப்படைந்திருக்கிறேன். வேத சத்தியத்தின் மீதுள்ள அவர்களுடைய அன்பே நாம் பின்பற்ற வேண்டிய ஒரு நல்ல முன்மாதிரியாகும். குறிப்பாக, போதகர்களாக அவர்கள் வைத்துப்போன அவர்களுடைய நல்ல முன்மாதிரிக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த இருவருமே அவர்களுடைய காலத்தில் மிகப் பிரபலமானவர்களாக காணப்பட்டனர். ஆனால் அவர்களில் யாரும் தங்களுடைய போதனைகளை பின்பற்றுகிறவர்களுக்கென்று ஒருங்கிணைந்த ஒரு இயக்கத்தை உருவாக்கும் பொருட்டு ஐரோப்பா முழுவதும் பயணம் செய்வதில் தங்கள் ஆண்டுகளைச் செலவிடவில்லை. மாறாக, அவர்கள் இருவரும் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பது மற்றும் போதிப்பது என்ற தங்கள் முதன்மையான அழைப்பிற்காகத் தங்களை அர்ப்பணித்தனர். இருவருமே அயராத பிரசங்கிகளாக இருந்தனர்—லூதர் ஜெர்மனியில் உள்ள விட்டன்பெர்க்கிலும், கால்வின் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவிலும் தொடர்ந்து பிரசங்கித்து வந்தனர். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்காக செய்யப்படும் ஊழியத்தை குறித்து மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக செயல்பட்டார்கள். எனவே அவர்கள் உண்மையான ஒரு பிரசங்கியின் பணியைப் பற்றிப் பேசும்போது, நான் அதை உன்னிப்பாகக் கவனிக்கிறேன்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மார்ட்டின் லூத்தரின் பிரசங்கத்தை குறித்த மேற்பார்வையைப் பற்றி பேசும்படியாய் எனக்கு அழைப்பு வந்தது. ஒரு பிரசங்கியாக அதற்கென்று நான் ஆயத்தம் செய்யும்போது அதனுடைய கருப்பொருள் எனக்கு மிகவும் விலையேறப்பெற்ற ஒன்றாக காணப்பட்டது. பிரசங்கத்தை பற்றி லூத்தர் சொன்னவைகள் போதகருக்கு மட்டுமல்ல, முழு திருச்சபைக்கும்தான் என்பதையும் நான் கண்டுபிடித்தேன். அவருடைய வார்த்தைகள் நாம் வாழக்கூடிய இந்த காலகட்டத்திலும் எவ்வளவு பொருத்தமானதாக இருக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
லூத்தர் எழுதும்போது அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தக்கூடிய ஒரு காரியம் என்னவென்றால், ஒரு பிரசங்கி “போதிக்கத் திறமையுள்ளவராக” (apt to teach) இருக்க வேண்டும் என்பதாகும். பல கோணங்களில் இதை நாம் ஆராயும் போது, இது ஒரு பெரிய மற்றும் புதியதான, நூதனமான ஒன்றில்லை, ஏனெனில் அவர் புதிய ஏற்பாட்டில் திருச்சபை மூப்பர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளையே மீண்டும் கூறுகிறார் (1 தீமோத்தேயு 3:2). ஆயினும், இன்று நம்மிடையே இருக்கும் பிரசங்கிகளிடையே காணப்படும் எதிர்பார்ப்பை நினைவு கூறும்போது, வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை எதிரொலிக்கும் லூத்தரின் வார்த்தைகள், மீண்டும் கேட்கப்பட வேண்டிய புதிதான நமக்கு ஒன்றாக தெரிகிறது.
ஊழியக்காரரின் முதன்மையானப் பணி போதிப்பதே என்ற கருத்து இன்று திருச்சபையில் கிட்டத்தட்ட தொலைந்தே போய்விட்டது. நாம் நம்முடைய திருச்சபைகளுக்கு ஊழியர்களை ஊழியம் செய்யும்படி அழைக்கும்போது, திறமையான நிர்வாகிகளையும், திறமை வாய்ந்த நிதிதிரட்டுபவர்களையும் , நல்ல சபை அமைப்பாளர்களையும் நாம் தெரிந்தெடுப்பதை பார்க்கலாம். நிச்சயமாக, அவர்கள் சில அவசியமான இறையியலையும் வேதத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் கூடிவரும் திருச்சபைக்கு தேவனுடைய காரியங்களைக் போதிக்கத் தகுதியுள்ளவர்களாக இவர்கள் இருக்க வேண்டும் என்பதில் நாம் முன்னுரிமை அளிப்பதில்லை. நிர்வாகப் பணிகளே மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.
ஆனால் இவ்விதமான ஒரு முன்மாதிரியை இயேசு எங்கும் பின் வைத்துப் போகவில்லை. உயிர்த்தெழுந்த பிறகு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேதுருவுடன் சந்தித்த நிகழ்வுகளை நீங்கள் நினைவு கூறுங்கள். பேதுரு பகிரங்கமாக இயேசுவை மூன்று முறை மறுதலித்திருந்தார். இயேசு கிறிஸ்து அப்போஸ்தலனை மீட்டெடுக்கும் வேலையைச் செய்தார், அவனிடம் மூன்று முறை “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்று கூறினார் (யோவான் 21:15-19). இதனுடைய தொடர்ச்சியாக, இந்தக் கட்டளை திருச்சபையின் மூப்பர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஏனெனில் உலகெங்கிலும் உள்ள திருச்சபைகளில் கூடிவரும் தேவனுடைய ஜனங்கள் அனைவரும்
இயேசுவுக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் அவருடைய ஆடுகள். மேலும், கிறிஸ்துவுக்குள் அபிஷேகம் செய்யப்பட்ட ஒவ்வொரு ஊழியக்காரரும் அந்த ஆடுகளைப் பராமரிப்பதற்காகத் தேவனால் தெரிந்தெடுக்கப்படுவதும் அல்லாமல், அந்தப் பொறுப்பை நம்பிக்கையோடு செய்யும்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊழியக்காரர்கள் கிறிஸ்துவின் ஆடுகளைப் பராமரிக்க அழைக்கப்படுவதால், நாம் அதை “போதகப் பணி” என்று அழைக்கிறோம். போதகர்கள் கிறிஸ்துவின் கீழ் செயல்படும் மேய்ப்பர்களாவர். எந்த மேய்ப்பன் தனது ஆடுகளைப் புறக்கணித்து, அவைகளுக்கு உணவளிக்க வேண்டிய நேரமோ அல்லது அதற்கான சிரமமோ எடுத்துக் கொள்ளாமல் இருப்பான்? நம்முடைய கர்த்தருடைய ஆடுகளுக்கு உணவளிப்பது முக்கியமாகப் போதிப்பதன் மூலமாகவே வருகிறது.
வழக்கமாக, நாம் பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் இடையேயான வேறுபாட்டை பார்க்கலாம். பிரசங்கிப்பது என்பது புத்திமதி கூறுதல், விளக்கப்படுத்துதல், எச்சரித்தல், உற்சாகப்படுத்துதல் மற்றும் ஆறுதல் போன்ற விஷயங்களை உள்ளடக்கியது. அதே நேரத்தில் போதிப்பது என்பது பல்வேறு பகுதிகளில், அதோடு தொடர்புடைய விவரங்களையும் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களையும் கொடுப்பதாகும். இருப்பினும், நடைமுறையில், இந்த இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. பிரசங்கம் குறிப்பிட்ட பகுதியை மக்களோடு தொடர்புபடுத்தி போதகத்தையும் உள்ளடக்க வேண்டும். மேலும், மக்களுக்குத் தேவனுடைய காரியங்களை போதிப்பது ஒரு நடுநிலையான முறையில் செய்யப்பட முடியாது. மாறாக அவர்கள் கிறிஸ்துவின் வார்த்தைக்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படியும்படி உற்சாகப்படுத்தப்பட வேண்டும்.
தேவனுடைய மக்களுக்குப் பிரசங்கமும் போதனையும் அவசியம். மேலும் அவர்களுக்கு வாரத்திற்கு இருபது நிமிட அறிவுரையும் புத்திமதியும் தேவைப்படுவதை விட அதிகமாகத் தேவைப்படுகிறது. ஒரு நல்ல மேய்ப்பன் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆடுகளுக்கு உணவளிக்க மாட்டார். அதனால்தான் லூத்தர் விட்டன்பெர்க் மக்களுக்குக் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் போதித்துக் கொண்டிருந்தார். கால்வினும் ஜெனீவாவில் அதையே செய்து கொண்டிருந்தார். நம்முடைய நாட்களிலும் நாம் அதையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நம்முடைய விசுவாசப் பிதாக்களின் வாழ்வில் தெளிவாகத் தெரிந்த வழக்கமான போதக ஊழியத்தை திருச்சபைகள் மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
திருச்சபைகள், தங்களால் முடிந்தவரை, தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் பல வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஞாயிறு மாலை ஆராதனை, வாரத்தின் நடுவில் செய்யப்படும் ஆராதனைகள் மற்றும் வேதாகம வகுப்புகள், ஞாயிறு பள்ளி, வீட்டு வேதாகமப் படிப்புகள் போன்றவைகள் மூலமாக பொதுவான தேவனுடைய வார்த்தையால் போஷிக்கப்படும்படி ஒவ்வொரு வாரமும் அநேக வாய்ப்புகளை ஏற்படுத்திதர வேண்டும். விசுவாசிகள் தங்களால் முடிந்தவரை, வேதத்தின் ஆழமான சத்தியங்களில் உள்ள புத்திமதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அநேக போதிக்கும் திட்டங்களை உண்டாக்குவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குவதற்காக நான் இப்படி சொல்லவில்லை. மேலும் திருச்சபை அங்கத்துவர்கள் அல்லது திருச்சபையை நிர்வகிப்பவர்கள் மீது சமாளிக்க முடியாத ஒரு போதிக்கும் சுமையை நான் வைக்க விரும்பவில்லை. ஆனால் வரலாற்றை திருப்பிபார்க்கும் பொழுது திருச்சபைகளில் காணப்பட்ட மிகப்பெரிய உயிர்மீட்சி மற்றும் சீர்திருத்தங்கள் தேவனுடைய வார்த்தையால் அடிக்கடி, தொடர்ச்சியாக போஷிக்கப்படுதல் மற்றும் தெளிவான பிரசங்கங்கள் போன்றவற்றை செயல்படுத்தியதன் காரணமாகவே உண்டாகின.
பரிசுத்த ஆவியானவர் நம்முடைய திருச்சபைகளுக்கும் நம்முடைய தேசத்திற்கும் எழுப்புதலைக் கொண்டு வருவதை நாம் பார்க்க விரும்பினால், அதற்கு வேத வியாக்கியான பிரசங்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரசங்கிகள் தேவை. மேலும், தேவனுடைய வார்த்தையினால் தாங்கள் போஷிக்கப்பட வேண்டும் என்பதற்காக மேய்ப்பர்களைத் தேடுபவர்கள் மற்றும் கிடைக்கக்கூடிய வேத சத்தியங்களின் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விசுவாசிகள் போன்றோர்களே இன்றும் நமக்கு தேவை.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


