3 Things about Deuteronomy
உபாகமம் புத்தகத்தை குறித்து அறிந்துக் கொள்ளவேண்டிய மூன்று காரியங்கள்
18-12-2024
ஜான் கால்வினின் சபையின் சீர்திருத்தத்தின் அவசியம்
25-01-2025
3 Things about Deuteronomy
உபாகமம் புத்தகத்தை குறித்து அறிந்துக் கொள்ளவேண்டிய மூன்று காரியங்கள்
18-12-2024
ஜான் கால்வினின் சபையின் சீர்திருத்தத்தின் அவசியம்
25-01-2025

மார்ட்டின் லூத்தர் எவ்வாறு மரித்தார்?

Stephen-Nichols-How-Did-Martin-Luther-Die

Stephen-Nichols-How-Did-Martin-Luther-Die

மார்ட்டின் லூத்தர் 1546 பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று நித்திய ஜீவனுக்குள் பிரவேசித்தார். அவர் மரிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, தனது நண்பனுக்கு, தன்னுடைய தள்ளாமையுள்ள, பலம் குறைந்த முதுமை காலத்தை குறித்து முறுமுறுப்புள்ள ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினார்,” நான் மிகவும் வயதாகி, சோர்ந்து போய், குளிர்ந்த நிலையில், தொய்வுற்று, களைத்துப் போய் எல்லாவற்றிற்கும் மேலாக ஒற்றை கண்ணுடையவனாய் காணப்படுகிறேன். அந்த கடிதத்தின் முடிவில்,மிகுந்த பெருமூச்சுகளோடு, நான் பாதி மரித்து விட்டேன் விரைவில் கிறிஸ்துவுடன் சமாதானத்துடன் இருப்பேன் என்று எண்ணுகிறேன் என்று எழுதியிருந்தார்.

ஆனால் அவர் நினைத்தவாறு உடனடியாக சமாதானத்தோடு மரிக்கவில்லை. அவர் பிறந்த  எய்ஸ்பென் என்ற ஊரில் நெருக்கடி ஏற்பட்டது.  சமுதாய விதிமுறைகளும், ஏன் திருச்சபை சார்ந்த விதிமுறைகளும் கூட தாக்கப்படும் அளவிற்கு அந்த நெருக்கடியானது காணப்பட்டது. ஏற்கனவே தோய்ந்து போன அவர் தான் பிறந்த ஊரில் ஏற்பட்ட அந்த நெருக்கடியை சரிப்படுத்தும் படியாய் அங்கே பயணம் பண்ண புறப்பட்டார். அவர் தான் தங்கியிருந்த விட்டன்பர்க் என்னும் இடத்தை  விட்டு தன்னுடைய மூன்று மகன்களோடும்,சில வேலையாட்களோடுங்கூட அங்கே செல்ல புறப்பட்டார். அவர்கள் ஹாலே என்ற இடம் வரைக்கும் செல்ல திட்டமிட்டார்கள். ஹாலே, லூத்தருடன் நீண்ட நாள் பயணித்த, நெருங்கிய கூட்டாளியான டாக்டர் ஜஸ்டஸ் ஜோனஸ் என்பவருடைய குடியிருப்பாய் இருந்தது. லூத்தர் பனிப் பிளவுகள் நடுவிலும் மற்றும் படகுகளிலும் மாறி மாறி, ஒரு அனபாப்டிஸ்ட்டுடைய பகைஞனை போலவும் மற்றும் ரோமன்  கத்தோலிக்கத்தினுடைய பிஷப் மற்றும் போப்புக்கு விரோதமான ஒரு பகையாளியை போலவும் பயணப்பட்டார். அவர் ஏற்கனவே பாதி மரித்துவிட்டவரை போல இருந்தாலும் தான் பயணிக்கிற நோக்கத்தில் முழுமையான அர்ப்பணிப்பை கொண்டவராக இருந்தார்.

1519 இல் லெய்ப்சிக் என்ற இடத்தில் பெரிய விவாதம் எழும்பினது முதல் இந்த ஜஸ்டஸ் ஜோனஸ் என்பவர் லூத்தருடைய நெருங்கிய சீசனாக இருந்தார். லூத்தருடைய கடுமையான நேரங்களில் ஜஸ்டஸ் அவரோடு கூட நின்று தன்னை இணைத்துக் கொண்டவர். லூத்தர் வாட்பர்க் என்ற இடத்தில் நாடு கடத்தப்பட்ட போது விட்டன்பர்க்கில் சீர்திருத்தம் முன்நோக்கி வளர துணை புரிந்தவராக இந்த ஜஸ்டஸ் இருந்தார். தற்போது லூத்தருடைய கடைசி பயணத்தில் அவரோடு கூட ஜஸ்டஸ் ஜோனஸ் இணைந்திருந்தார்.

லூத்தரும் அவரோடு பயணித்த திரளான கூட்டமும் வெற்றிகரமாக எய்ஸ்பென் என்ற இடத்தை வந்தடைந்தனர். அந்த  நகரத்தினுடைய கதாநாயகனாக மார்ட்டின் லூத்தரை திரள் கூட்டமானது உற்சாகத்தோடு  வரவேற்றது மட்டுமல்ல, திரளான சேவகர்கள் படை சூழ குதிரை மேல் ஊர்வலமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த ஞாயிற்றுக்கிழமை  ஜனவரி 31 அன்று அவர் தேவனுடைய செய்தியை அங்கே பிரசங்கித்தார்.

லூத்தர் கிறிஸ்துவையே, சிலுவையில் அறையப்பட்ட அவரையே பிரசங்கித்தார். அவருடைய பிரசங்கத்தை கேட்ட திரளான சபை மக்கள் லூத்தரை அங்கே பார்க்கவில்லை அதற்கு பதிலாக கிறிஸ்துவையே, சிலுவையில் அறையப்பட்ட அவரையே அங்கே பார்த்தார்கள். இதுவே லூத்தருடைய மேன்மையாக இருந்தது.

இந்த பயணமே லூத்தருக்கான இறுதி யாத்திரை என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. லூத்தர் தனது அருமையான மனைவி கெட்டிக்கு, பனியினுடைய கடுமையையும், உறைந்த மழையினுடைய தாக்கத்தையும் குறித்து ஒரு கடிதம் எழுதினார். ஆனால் இந்த உறைந்த பனித்துண்டுகளின் பாதிப்பினால் உருவான எல்லாவிதமான பாதிப்புகளையும் அவர் எழுதவில்லை. லூத்தர் மிகவும் நோய்வாய் பட்டார். குளிர்ப்பனியினுடைய தாக்கத்திலிருந்து லூத்தரை பாதுகாக்க அவருடைய அறையின் வெளியே வலது பக்கத்தில் கட்டுக்கடங்காத நெருப்பு தழலானது எப்பொழுதும் எரிந்து கொண்டே இருந்தது. இவைகள் லூத்தரை பயத்துக்குள்ளாகியது. அவர் தங்கி இருந்த அறையும் கூட மிகவும் கோரமாகவே காணப்பட்டது. அந்த அறையினுடைய சுவற்றில் இருந்த சிமெண்ட் எல்லாம் கீழே விழுந்தன. அதனால் அந்த சுவற்றினுடைய கற்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து கீழே விழுந்தன. ஒரு சமயம், ஒரு தலையணை போன்ற பெரிய கல்லானது லூத்தருடைய தலையை பிளக்கும்படியாக அவருக்கு அருகில் வந்து விழுந்தது. இந்த எதிர்பாராத பயமுறுத்தக்கூடிய சம்பவங்களால் அவருடைய மனைவியாகிய கெட்டி மிக கவலையோடு தன்னுடைய வீட்டிலிருந்தார்.  அவர் லூத்தரை ஆறுதல்படுத்தும்படி மிகுந்த கவலையோடும் பயத்தோடும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினார். லூதர் அதற்கு மறுபதிலும் எழுதினார். அதில் தன்னுடைய மனைவியை அவர் இழந்து வாடுவதாகவும் ஆனால் அதே சமயத்தில் அவரை விட, ஏன் தேவதூதர்களை விட தன்னை நன்றாக பராமரிக்கக் கூடிய ஒரு நபர் இருக்கிறார் என்றும்,அந்த நபர் மாட்டுக் கொட்டிலில், தன்னுடைய தாயின் முலைப்பாலை உண்கிறார் என்றும், மட்டுமல்ல அவர் வல்லமை மிகுந்த தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்தை லூத்தர் பிப்ரவரி 7 ஆம் தேதி எழுதினார். அதை எழுதி முடித்து பதினோரு நாட்கள் கழித்து அவர் கர்த்தருக்குள் மரித்துப் போனார். எய்ஸ்பென் அவருடைய பிறந்த ஊர் மட்டுமல்ல இப்பொழுது அவர் மரித்த ஊராகவும் மாறியது. லூத்தருடைய மூன்று மகன்களும் அவருடைய  உடலை திரும்பவும் விட்டன்பர்க் என்னும் இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே திரள் கூட்டமானது அவருக்கு இறுதி மரியாதை செய்யும்படியாக  திரண்டு இருந்தது.

லூத்தர் மரிப்பதற்கு முன்பாக எய்ஸ்பென் என்னும் இடத்தில் இருந்தபோது, தன்னுடைய கடைசி தேவசெய்தியை அங்கே பிரசிங்கத்தார். அந்த செய்தியானது வேதத்தினுடைய இரண்டு வசனங்களை மையமாக வைத்து கொடுக்கப்பட்டிருந்தது. ஒன்று சங்கீத புத்தகத்திலிருந்தும் மற்றொன்று சுவிசேஷத்திலிருந்தும் எடுக்கப்பட்டிருந்தது. சங்கீதம் 68: 19, “எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே” என்ற வசனமும் மற்றும் யோவான் 3: 16  என்ற  வசனத்தையும் மேற்கோள் காட்டி, நம்முடைய தேவன் உண்மையாகவே இரட்சிப்பின் தேவனாகவும், அந்த இரட்சிப்பின் கிரியை அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசு மூலமாகவும் வருகிறது என்றும் அதில் அழுத்தமாக பிரசங்கித்திருந்தார்.

லூகாஸ் கிரனாக் என்பவர் லூத்தருடைய நண்பரும் சிறந்த ஓவியருமாக இருந்தார். அவர் தன்னுடைய நண்பரான லூத்தருக்கு ஒரு  ஓவியத்தை நினைவுச் சின்னமாக வரைந்தார். அந்த ஓவியத்தில் கேசில் சபையின் பிரசங்கபீடமானது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த பிரசங்க பீடத்தில் லூத்தர் நின்று பிரசங்கிப்பதை போலவும், திரளான ஜனக்கூட்டம் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தில் லூத்தருடைய மனைவியாகிய கெட்டியும் இடம் பெற்றிருந்தார்.  மட்டுமல்ல மரித்துப்போன அவருடைய 13 வயது மகளான மேக்லினாவும் அங்கே இருப்பதைப் போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. லூத்தருக்கும் அவருடைய சபைக்கும் நடுவாக கிறிஸ்து இருப்பதைப் போன்றும் அந்தக் காட்சி அமைந்திருந்தது. லூத்தர் இயேசுவையே சிலுவையில் அறையப்பட்ட அவரையே தன்னுடைய ஜனங்களுக்கு பிரசங்கித்ததினால் அவருடைய சபை மக்கள் லூத்தரையல்ல, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே அங்கே எப்பொழுதும் கண்டனர். இதுவே லூத்தருடைய கனமுள்ள சொத்தாக இருந்தது. இந்த சுவிசேஷ சொத்தான கிறிஸ்து இயேசு லூத்தருடைய காலத்திற்கு பின்பும் நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

1940 இல் W.H.அடன் என்பவர் லூத்தரையும் அவர் பின்பற்றின மகிமையான கிறிஸ்துவையும் பாராட்டும்படியாக ஒரு சிறு கவிதையை இயற்றியிருந்தார். அந்த கவிதைக்கு லூத்தர் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. அதனுடைய கடைசி வரிகள் பின்வருமாறு முடிகிறது,

“மனிதனுடைய எல்லா மேன்மைகள், கிரியைகள், சமுதாய வாழ்வு எல்லாம் கேடானது.

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று அவர் தைரியமாய் முழங்கினார்.

உலகத்தில் உள்ள எல்லா ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள்,

அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதை குறித்தும் நடுங்கவோ அக்கறை கொள்ளவோ இல்லை.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஸ்டீபன் நிக்கோல்ஸ்
ஸ்டீபன் நிக்கோல்ஸ்
டாக்டர். ஸ்டீபன் நிக்கோல்ஸ் சீர்திருத்தம் வேதாகம கல்லூரியின் தலைவரும் லிகனியர் ஊழியத்தின் தலைமை அதிகாரியுமாவார். 95 தீசிஸ்களுக்கு அப்பால், A time for Confidence, R.C Sproul: A Life 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.