The-Resurrection-and-the-Life
இயேசுகிறிஸ்து  எப்படி உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்?
22-07-2025
How-Is-Jesus-the-True-Vine
இயேசு எப்படி “மெய்யான திராட்சச்செடி” யாக இருக்கிறார்?
29-07-2025
The-Resurrection-and-the-Life
இயேசுகிறிஸ்து  எப்படி உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்?
22-07-2025
How-Is-Jesus-the-True-Vine
இயேசு எப்படி “மெய்யான திராட்சச்செடி” யாக இருக்கிறார்?
29-07-2025

எவ்வாறு இயேசு வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார்?

How-Is-Jesus-the-Way-the-Truth-and-the-Life

சி.என். வில்போர்ன்

(How Is Jesus the Way, and the Truth, and the Life?)

சில வருடங்களுக்கு முன்பாக, கல்வியாளர் ஒருவர் வரலாற்று சிறப்புமிக்க கல்லூரியின் வளாகத்தில் சகிப்புத்தன்மை கொண்ட சூழலை ஆதரிப்பதை குறித்து தனது கருத்தை முன்வைத்தார். பின்னர், அவர் தனது பல்கலைக்கழகம் சகிப்பின்மையை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் கூறினார். இந்த கருத்துக்களின் முரண்பாட்டை நினைவில் கொள்ளுங்கள். இது முரண்பாடாக இருப்பினும், சகிப்புத்தன்மை பற்றி பெருமை பேசும் காலத்தில் நாம் இப்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். இது போலத்தான், எந்தவொரு தனித்துவ கொள்கைக்கும் கடுமையான வெறுப்பு தற்காலத்தில் எழும்புகிறது. மிக குறிப்பாக, கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் பிரத்யேகமான கூற்றுக்களை பேசும்பொழுது இது உண்மையாகிறது. 

பல்வேறு பிரத்யேகமான கூற்றுகளால் வேதாகமம் நிறைந்துள்ளது. ஜீவன் மற்றும் மரணம் பற்றிய காரியங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தின் அஸ்திபாரமாக உள்ளது. வாழ்விற்கான வழியும் மரணத்திற்கான வழியும் வேதத்தில் முழுவதுமாக நிறைந்துள்ளது, இவற்றிற்கான விளக்கம், அவிசுவாசத்தினால் பலிசெலுத்தின காயீன் மற்றும் விசுவாசத்தினால் பலிசெலுத்தின ஆபேல் மற்றும் ஏசா, யாக்கோபு வாழ்வில் நம்மால் காணமுடியும். இயேசுவும், ஜீவன் மற்றும் மரணத்திற்கான மாதிரியை இடுக்கமான வழி மற்றும் விசாலமான வழியோடு ஒப்பிட்டு பேசுகிறார். ஒரு வழி ஜீவனுக்கு நேராக செல்கிறது மற்றொன்று மரணத்திற்கு நேராக செல்கிறது (மத் 7:13-14).  “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6) என்று இயேசு சொல்லும்போது, இடுக்கமான வழி இயேசுவில் உருவகப்படுத்தப்படுகிறது. இந்த தனித்துவமான கூற்றை, இரண்டாம் நூற்றாண்டில் இருந்து இன்று வரை  வேதத்துக்கு அப்பாற்பட்ட இலக்கியங்கள், நம்பிக்கைகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றில் கூட நாம் காணலாம். 

ஆனால் கேள்வி என்னவென்றால்: எவ்வாறு இயேசு வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்? இதற்கு பிரிக்கமுடியாத இரண்டு வெவ்வேறு பதில்கள் உள்ளன. ஒன்று உள்ளார்ந்த பதில் மற்றொன்று அகநிலை பதில். உள்ளார்ந்த நிலையில், இயேசு மாம்சத்தில் வந்த தேவனாக இருப்பதினால் பிரத்யேகமாக அவர் வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். மற்றொன்று, புறம் சார்ந்த நிலையில், கிறிஸ்து யார் அவர் என்ன செய்தார் என்பதில் உள்ள விசுவாசத்தின் மூலமாக அவரது இரட்சிப்பு பாவிகளுக்கு அருளப்படுகிறது.

கிறிஸ்துவின் இந்த வார்த்தையை அவரது உள்ளார்ந்த தன்மையில் சிந்தித்துப் பார்க்கும்பொழுது, அவரது இருத்தலிலும் அவரது பணியிலும் அவர் “வழி” யாக இருக்கிறார் காரணம் கிறிஸ்து தேவனாக இருக்கிறார். அவரது நாட்களில் வாழ்ந்த யூத தலைவர்களுக்கு கிறிஸ்துவின் இந்த கூற்று எரிச்சலூட்டும் ஒன்றாக இருந்தது. “நானே” என்ற வார்த்தை தெய்வீகத்தை வலியுறுத்தும் உறுதியான சொல்லாகும், மற்றும் இதை அவர்களும் அறிந்திருந்தனர் (யோவான் 10:10-33). அவர் தேவனும் மனிதனுமாக இருப்பதினால் அவர் வழியாக இருக்கிறார். ஆதாம் நம்மை வீழ்ச்சியின் வழியில் கொண்டு வந்ததினால், நாம் அதிலிருந்து வெளியேறுவதற்காக கிறிஸ்து மாம்சத்தை தரித்து நமக்காக வழியானார் (ரோமர் 5). ஆதாம் பின்பற்றாத நீதி மற்றும் பரிசுத்தத்தின் வழியை கிறிஸ்து பூரணமாக பின்பற்றினார். அவர் ஸ்திரீயினிடத்தில் பிறந்தபடியினால், ஆதாமின் இடத்தை எடுத்துக்கொண்டார் (கலா 4:4). அவர் தேவனாக இருப்பதினால், அவரது பூரணமான பரிகார பலியினால் அநேகருடைய பாவங்களை சுமக்க முடிந்தது ( ஏசாயா 53:12, 1 பேதுரு 1:24). இவருக்குள் மனிதன் தேவனோடு ஒப்புரவாகமுடிந்தது (ரோமர் 5:11, 1 கொரி 5:18-21). தேவனும் மனிதனுமாக இருக்கக்கூடிய ஒருவரால் மாத்திரமே வழியாக இருக்கமுடியும்.

பொதுவான நிலையில் சிந்திக்கையில், கிறிஸ்து சத்தியமாகவும் இருக்கிறார். அவரது வார்த்தைகள் சத்தியத்திற்கு ஆதாரமாயிருக்கிறது என்று கிறிஸ்து கூறுவதை இதே சுவிசேஷத்தில் நாம் வாசிக்கிறோம் (யோவான் 8:31-32). பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து ஒருவனை சத்தியம் விடுதலையாக்குகிறது (யோவான் 8:34-35). எனவே இயேசு கூறுகிறார், “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள்.” (யோவான் 8:36). ஒருவேளை நீங்கள் கேட்கலாம், அவரது வார்த்தைகள் தானே விடுதலையாக்கமுடியும்? என்று. ஓ! ஆனால் ஜீவனுள்ள வார்த்தை மற்றும் சத்தியத்தை கொடுத்த நபரிடமிருந்து வேதத்தையும் சத்தியத்தையும் பிரிக்கமுடியாது. எழுதப்பட்ட வார்த்தையின் இதே உருவகத்தை எபிரெயர் 4:12-13 ல் நம்மால் காணமுடியும். இயேசு ஜீவனும் மெய்யான தேவனுமாயிருக்கிறபடியால் அவர் சத்தியமாயிருக்கிறார் (எரே 10:10).

நமக்கு முன்பாக இருக்கும் எதிர்காலம், சத்தியத்தின் உண்மைத்தன்மை மற்றும் வாழ்வின் அர்த்தங்கள் பற்றிய அநேக குழப்பங்களாலும், நிச்சயமின்மையாலும் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம். இருப்பினும் திருச்சபை நம்பிக்கையோடு நமக்கு பதிலளிக்கிறது.

கிறிஸ்து சத்தியமுள்ளவர் என்ற உண்மை, அவர் ஜீவனாயிருக்கிறார் என்ற மேன்மையான கூற்றுக்கு நம்மைக் கொண்டுவருகிறது. வேதத்தின் ஆரம்ப பக்கங்களில், பேசுகிற கடவுளையும், அவரது செயல்களினால் அனைத்து ஜீவன்களும் உருவானது என்பதைப்பற்றியும் வாசிக்கிறோம். கொலோ 1:16-17 ல் “அவராலே சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது… அவருக்குள் சகலமும் நிலைநிற்கிறது.” என்று கிறிஸ்துவைப்பற்றி வாசிப்பதில் ஆச்சரியமேதுமில்லை. அவர் படைத்தவராகயிருக்கிறார். அவர் பாவிகளின் இரட்சகராயிருப்பதினால், தமது பிள்ளைகளுக்காக புதிய வானத்தையும் பூமியையும் அருளுகிறார். கிறிஸ்து தமது வார்த்தையினால் எல்லாவற்றையும் படைத்தாரென்றால், அவரே வார்த்தையாக இருந்து அவரால் நித்திய ஜீவனை அளிக்கமுடியும்.

சங்கீதங்களில் இந்த உண்மைகளை பற்றி நாம் படிக்கிறோம். ஜீவனுக்கேதுவான வழி அவருடைய சமுகத்தில் உள்ளது (சங் 16:11). அதே சங்கீதத்தில் சத்தியம் ஆலோசனையாக குறிப்பிடப்படப்பட்டு பரிசுத்தவானை உணர்த்துகிறது (16:7). மேலும், ஜீவன் தேவனின் அடைக்கலத்தில் உள்ளது என்றும், அதை அவர் பாதுகாக்கிறார் என்றும் விவரிக்கப்படுகிறது. சங்கீதம் 119 ல் வெறுமனே தேவன் பாதைகளுக்கு வெளிச்சத்தை கொடுப்பவர் மாத்திரமல்ல, அவரே வார்த்தையாக இருந்து ஜீவ பாதைக்கான மெய்யான அர்த்தமாயிருக்கிறார். மெய்யாகவே அவர் வழியாகவே இருக்கிறார்.

கிறிஸ்து மாம்சத்தில் வந்த தேவனாக இருப்பதினால், அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். ஆனால் இது, உங்களுக்கும் எனக்கும் கிறிஸ்து எவ்வாறு இவை எல்லாமுமாயிருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை. “அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்” என்ற சத்தியம் எவ்வாறு நமக்கு அர்த்தமுள்ளவைகளாகவும், வாழ்வின் மாற்றத்திற்கானதாகவும் உள்ளது? இவை எவ்வாறு ஓர் வரலாற்று உண்மையாக மட்டும் இல்லாமல் உள்ளது? இயேசுவின் தன்மையும், அவனது பணியும் எவ்வாறு நமது வாழ்வில் தாக்கங்கள் ஏற்படுத்துகிறது? இதற்கான பதில், கிருபையால், விசுவாசத்தின் மூலம் மற்றும் கிறிஸ்துவில் மட்டுமே. நாம் விசுவாசத்தின் மூலமாக பிதாவிடம் செல்வதற்கான வழியாக அவர் இருக்கிறார். விசுவாசத்தின் மூலம் அவரது சத்தியம் நம்முடையதாகிறது. விசுவாசத்தின் மூலமாக அவரது ஜீவன் நமதாகிறது (யோவான் 10:10). விசுவாசத்தின் மூலம் அவரே பாவிகளுக்கு இவை எல்லாமுமாயிருக்கிறார். “கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்.” (அப் 16:31). அவர் தொலைதூர கடவுள் அல்ல, மாறாக விசுவாசத்தின் மூலமாக நம்மோடு இருக்கும் தேவன்.

நமக்கு முன்பாக இருக்கும் எதிர்காலம், சத்தியத்தின் உண்மைத்தன்மை மற்றும் வாழ்வின் அர்த்தங்களை பற்றிய அநேக குழப்பங்களாலும், நிச்சயமின்மையாலும் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம். இருப்பினும் திருச்சபை நம்பிக்கையோடு நமக்கு பதிலளிக்கிறது. கிறிஸ்து மாம்சத்தில் வந்த தேவனாக இருப்பதினால் அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். தேவன் மட்டுமே இவையனைத்துமாக இருக்கமுடியும். விசுவாசம் என்கிற கிருபையுள்ள பரிசினால் கிறிஸ்து, பாவிகளுக்கு வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். பிதாவோடு நம்மை ஒப்புரவாக்கும் கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தில் நம்மை விசுவாசம் கொண்டுவருகிறது. இதுவே முழுமையான சத்தியம், இவற்றை கிறிஸ்துவுக்குள் இருக்கும் அனைவரும் முழு நிச்சயத்தோடும் மகிழ்ச்சியோடும் அனுபவிக்க முடியும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

சி.என். வில்போர்ன்
சி.என். வில்போர்ன்
El Dr. C.N. Willborn es pastor principal de Covenant Presbyterian Church en Oak Ridge, Tenn., Y profesor adjunto de teología histórica en Greenville Presbyterian Theological Seminary en Greenville, S.C.