How-to-Read-Apocalyptic-Literature
வெளிப்படுத்தல் இலக்கியத்தை எவ்வாறு படிப்பது?
10-07-2025
How-Is-Jesus-the-Good-Shepherd
இயேசு எவ்வாறு நல்ல மேய்ப்பனாக இருக்கிறார்?
17-07-2025
How-to-Read-Apocalyptic-Literature
வெளிப்படுத்தல் இலக்கியத்தை எவ்வாறு படிப்பது?
10-07-2025
How-Is-Jesus-the-Good-Shepherd
இயேசு எவ்வாறு நல்ல மேய்ப்பனாக இருக்கிறார்?
17-07-2025

இயேசு எப்படிப்பட்ட  ஜீவ அப்பமாக இருக்கிறார்?

How-Is-Jesus-the-Bread-of-Life

யோவான் 6:48-ல், இயேசுவின் ஏழு “நானே” கூற்றுகளில் முதல் அறிக்கையை இங்கே சிந்திக்கலாம். இந்த கூற்றுகளில் ஆறு கூற்றுகள் ஒரு வேற்றுமையான பயன்பாட்டை(predicate nominative) கொண்டுள்ளன – அப்பம் (யோவான் 6:48), ஒளி (யோவான் 8:12; 9:5), வாசல் (யோவான் 10:7, 9), நல்ல மேய்ப்பன் (யோவான் 10:11, 14), உயிர்த்தெழுதலும் ஜீவனும் (யோவான் 11:25), மற்றும் வழியும், சத்தியமும், ஜீவனுமாய் (யோவான் 14:6) போன்றவைகளே – இவை இயேசுவின் ஆள்தன்மையையும், மீட்பின் செயலையும் பற்றி நமக்கு ஏதோ ஒன்றைத் தெரிவிக்கின்றன. இந்த கூற்றுகளில் ஒன்றான யோவான் 8: 58 இல், எந்த விதமான வேற்றுமை பயன்பாட்டையும் பார்க்க முடியாது. ஆனால் கர்த்தர் மோசேயினிடத்தில் அவன், கர்த்தருடைய நாமத்தை அறிந்து கொள்ள  விரும்பியபோது வெளிப்படுத்திய தெய்வீகப் பெயரான “நானே” என்ற பெயருக்கு இயேசு தனக்கு சொந்தம் கொண்டாடுவதை பார்க்கலாம் (யாத். 3:14). யோவான் 8:58-ல் உள்ள , “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்ற” முழுமையான கூற்றை பார்க்கலாம். இயேசு  “நானே”என்று அறிக்கையிட்ட ஒவ்வொரு 

 கூற்றும் அவருடைய தெய்வீகத்தன்மையின் உறுதிப்பாட்டை தெளிவுபடுத்துகின்றன. யூத மதத் தலைவர்கள் இயேசு மேசியா என்பதை நம்பாததால், இந்த அறிக்கையை அவர்கள் தேவதூஷணமாக எண்ணினார்கள். எனவே, “அவர்மேல் எறிவதற்காகக் கல்லுகளை எடுத்துக் கொண்டனர்” (யோவான் 8:59). இயேசு தமது தெய்வீக தன்மையை பற்றிப் வெளிப்படுத்திய சத்தியத்தை அவர்கள் புரிந்துகொண்டனர், ஆனால் அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. “நானே” என்ற அறிக்கைகளில் முதல் கூற்றை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது, அவர்களுடைய இந்த விசுவாசமின்மை ஒரு சிறிய பாவம் அல்ல என்பதை கண்டு கொள்ள முடியும். ஏனெனில்  இயேசுவின் வார்த்தைகள் ஜீவனா மரணமா என்பதை போன்றதொரு பிரச்சினையாகும்.

இயேசு, தமது சீஷர்களுடன் பேசின நீண்ட உரையாடலின் போது, “நானே ஜீவ அப்பம்” என்று கூறுகிறார் (யோவான் 6:48). ஐந்தப்பம் இரண்டு மீன்களை கொண்டு 5000 பேரை போஷித்த நிகழ்விற்கு பின்பு(யோவான் 6:5-14) அவர் இந்த அறிக்கையை சொல்லுகிறதை பார்க்கலாம். மற்றும் பஸ்கா பண்டிகை மற்றும் கூடாரப் பண்டிகைக்கு சற்று முன்பு இது நிகழ்கிறது (யோவான் 6:4). இந்த இரண்டு நிகழ்வுகளும், இயேசு நானே ஜீவ அப்பம் என்று அறிக்கையிட்டதற்கான  அர்த்தத்தை புரிந்துகொள்ள முக்கியமான பின்னணியை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, வனாந்தரத்தில் தேவன் அவர்களுக்குக் பாராட்டின பராமரிப்பை நினைவுகூறும் வண்ணமாய் அவர்கள் இந்த கூடாரப் பண்டிகையை அனுசரிக்கிறார்கள். வனாந்தரம் ஒரு ஆதரவு நிறைந்த இடமல்ல. உணவு, தண்ணீர், பகலில் நிழல், இரவில் வெளிச்சம் போன்ற மனிதனுடைய வாழ்க்கைக்கு ஏற்புடையதான, தேவையான எவ்விதமான வளங்களும்  இல்லாததே அதன் சிறப்பம்சமாகும். இருப்பினும், இந்தப் பாலைவனத்தில் அவர்கள் மேற்கொண்ட பயணங்களின்போது, சர்வ பூமி முழுவதற்கும் தேவனாகிய கர்த்தர் தன்னை தாராளகுணம் உடையவராக நிரூபித்தார். கிறிஸ்து இயேசுவுக்குள் தமது மகிமையின் ஐசுவரியத்தினால் அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தார் (பிலி. 4:19; 1 கொரி. 10:1-4 ஐப் பார்க்கவும்).  தேவன் அவர்களுக்கு தேவையான அனுதின அப்பத்தை கொடுத்ததே வனாந்தர நிகழ்வுகளில்  சொல்லப்பட்டுள்ள அற்புதங்களில் முதன்மையானதாகும். ஜனங்கள் இந்த அப்பத்தை முதன்முதலில் பார்த்தபோது, அது என்னவென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது. அதனால் அவர்கள் அதை மன்னா என்று அழைத்தார்கள். சங்கீதம் 78:23-25 வசனங்கள் வனாந்தரத்தில் அப்பத்தை அவர்களுக்கு புசிக்க கொடுத்த கர்த்தரின் நன்மையை நினைவுபடுத்துகிறது: 

 “அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தை பூரணமாய் அனுப்பினார்.

யோவான் 6-ல், யூதர்கள், மோசே தங்கள் பிதாக்களுக்கு மன்னாவை புசிக்க கொடுத்தது போல, இயேசுவும் ஒரு அற்புதத்தைச் செய்து தம்மை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டனர்.  மன்னாவை கொடுத்தது மோசே அல்ல, மாறாக  தம்முடைய பிதாவே அதை கொடுத்தார் என்று இயேசு அவர்களுடைய சிந்தனைகளை சரி செய்தார்.  மேலும், அவர்  ஜீவ அப்பம் நானே, அதாவது வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பம் என்றும், அது அவர்களுடைய ஆத்துமாக்களைப் போஷிக்க கூடியது என்றும் விளக்கப்படுத்தினார். இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பாக 40 வருடம் தேவன் தம்முடைய நல்ல ஈவாகிய அப்பத்தின் மூலம் அவர்களுடைய சரீரங்களை போஷித்தார். அந்த மன்னாவை புசித்தவர்கள் மரித்தார்கள். ஆனால், “என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார் (யோவான் 6:54).

 தேவன் மோசேயின் நாட்களில் மன்னாவை கொடுத்து போஷித்தது போலவே, இயேசு கிறிஸ்துவும் 5000 பேரை போஷித்து, தானே அதை  செய்த ஆண்டவர் என்பதை மீண்டுமாக செய்து காட்டினார். ஆனால் ஜனங்கள் மீண்டும் அவரைத்தேடி வந்தபோது, அவர்கள் உண்மையான ஆத்தும பசி அற்றவர்களாய் சரீர பசிக்காகவே தன்னை தேடி வருவதாக அவர் அவர்களை எச்சரித்தார். அவர்கள் அழிந்துபோகும் போஜனத்திற்காகவே கிரியை நடப்பித்தார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் நித்திய ஜீவன் வரைக்கும் நிலை நிற்கும் போஜனத்திற்காகவே கிரியை நடப்பிக்க வேண்டும். ஜீவனுக்குள் நிலைத்திருக்கும் உணவுக்காக உழைக்க வேண்டும். அப்போது இயேசு, தானே அந்த ஜீவ அப்பம் என்று வெளிப்படுத்தினார்.

அப்பம் மற்றும் அவருடைய மாம்சத்தைப் புசிப்பதும் அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணுவதும், இயேசுவின் மானுடத் தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இயேசுவை விசுவாசிப்பது என்பது, அவருடைய மாம்ச சரீரத்தின் பரிகார பலியை அங்கீகரிப்பதாகும். ஆனாலும், “நானே” என்று சொன்ன இயேசுவின் அறிக்கைகள் அவருடைய தெய்வீக சுபாவத்தைப் பற்றியும் பேசுகின்றன.  ஆகவே,  அவருடைய சரீர பலியின் மீதான விசுவாசத்தினால் மட்டும் ஒருவன் அங்கீகரிக்கப்படுவது மட்டுமல்ல, தேவனாக அவர் மானுடத் தன்மையை எடுத்து அழியாத ஜீவனை பெற்றிருக்கிறார் என்கிற விசுவாசமும் அவசியமாகும்.  ஏனெனில், அவருடைய மாம்சத்தை புசிப்பதே இரட்சிக்கும் விசுவாசத்தை விவரிக்க ஒரு பொருத்தமான பதமாகும், ஏனென்றால் நாம் புசிக்கும் போது, அது  உள்ளே சென்று நமக்கு ஜீவனை கொடுத்து, ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது. ஆனாலும், சரீரத்திற்கான உணவைப் போலல்லாமல், விசுவாசிக்குள் காணப்படும் கிறிஸ்துவின் ஜீவன் அன்பினால் பயிற்சி செய்யப்படும்போது அது சரீர அப்பத்தைப் போல அழிந்து குறைந்துபோவதில்லை. மாறாக அவருக்குள்ளாக காணப்படும் நித்திய ஜீவன் நாம் என்றென்றும் தேவனை நோக்கி வாழும்படியாய் நம்மை பலப்படுத்துகிறது.

இந்தக் கட்டுரை, “இயேசுவின் ‘நானே’ கூற்றுகள்” தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டாக்டர். ஜோஷ்வா ஓவன்
டாக்டர். ஜோஷ்வா ஓவன்
டாக்டர். ஜோஷ்வா ஓவன், ஃபுளோரிடாவின் போர்ட் ஆரஞ்சில் உள்ள ஸ்ப்ரூஸ் க்ரீக் பிரஸ்பைடீரியன் திருச்சபையின் மூத்த போதகர் ஆவார்.