
கொடிய நோயின் தாக்கத்தின் மத்தியில் நமது நம்பிக்கையை கண்டடைதல்
12-03-2026
ஊழியத்தில் ஏற்படும் மனச்சோர்வை கையாளுவது எப்படி?
19-03-2026விரக்தியை எவ்வாறு சமாளிப்பது?
நம்பிக்கை என்பது வாழ்வதற்கான ஏக்கம் என்றால் விரக்தி என்பது வாழ்வின் முடிவுக்கான ஏக்கம். சூரைச் செடியின் கீழ் படித்திருந்த எலியாவைப் போல் (1 இரா 19:1-10), தனது பிறப்பை பற்றி அங்கலாய்க்கும் யோபுவைப்போல (யோபு 3) அல்லது தனது வாழ்வில் விரக்தியை கொண்டுவந்த உபத்திரவங்களால் நிறைந்திருந்த பவுலைப் போலவும் ஜீவனுள்ள நம்பிக்கைக்குப் பிறந்த விசுவாசிகள் வேதனையான காலங்களில் சிக்கிக் கொள்ளக்கூடும்.
சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்,
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது, உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. (சங்கீதம் 42:7)
யோபு புலம்புகிறார், என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது. பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
(யோபு 17:1). வெறுமனே இவைகள் கவிதைப் பாடல்கள் அல்ல, நாம் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு அப்பால் துன்பம் நீடிக்கக்கூடிய ஒரு யதார்த்தத்தை அவை பிரதிபலிக்கின்றன.
விரக்தி என்பது வெறுமனே நான் நினைப்பதுபோல் சோகமான, அதிருப்தியோடு உள்ள அல்லது புரிதல் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. இல்லை. சார்ல்ஸ் ஸ்பர்ஜன், மார்ட்டின் லாயிட் ஜோன்ஸ் மற்றும் ஜான் பன்யன் போன்ற வைராக்கியமான போதகர்களும் கூட இத்தகைய ஆழ்ந்த மன பாரங்களையும் துன்பங்களையும் அனுபவித்தனர். எனவே விரக்தி, ஆன்மீக முதிர்ச்சியின் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் தாக்கும்.
விரக்தியில் இருக்கும் ஒருவர் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றுதான்: அதிலிருந்து விடுபடுவது. இத்தகைய போராட்டத்தின் இயல்பே, அதற்கான தீர்வு அல்லது விடுபடுதல் இல்லாமல் தோல்வி மற்றும் அர்த்தமற்ற தன்மையை காண்பிக்கும் அதன் பலம் மிக்க ஓர் மாயை தான். சங்கீதக்காரன் கூறுகிறார்:
ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. (சங்கீதம் 69:2).
கொந்தளிப்பான கடலில் தண்ணீரை மிதிப்பது போல, நாம் பார்வையிலேயே மூழ்கிவிடுவது போலவும், மீட்புப் பணிக்கு எட்டாத தூரத்தில் இருப்பது போலவும் உணர முடியும்.
மெதுவாக விடுபடுதல் அல்லது மனம் மற்றும் ஆத்துமா திடீரென விளிம்பிற்குத் தள்ளப்படுதல் என எதுவாக இருந்தாலும், விரக்தி என்பது விசுவாசியின் நம்பிக்கையின் யதார்த்தத்தை சிதைத்து, உடல், மனம் மற்றும் ஆத்துமாவின் திறனைக் குறைக்கிறது. அப்படியானால், மறுமீட்சி என்பது நமது பலவீனத்தில் கிறிஸ்துவைச் சார்ந்து, கீழ்ப்படிதல், பொறுமை மற்றும் நம்பிக்கையின் “சிறிய” படிகள் மூலம் விசுவாசத்தைப் பயன்படுத்தும்போது, விரக்தியின் வேகத்தை உடைக்கும் ஒரு மீட்டெடுக்கும் நோக்கத்தையும் மற்றும் திறனையும் உள்ளடக்கியது.
இடையூறு விளைவிக்கும் சிந்தனை
பன்யனின் மோட்ச பிரயாணத்தில் , கிறிஸ்தியான் அரக்கனின் கோட்டையில் தவித்தபோது, இருள் ஒரு மாயையாக அல்ல; அது ஒரு உணரக்கூடிய, மூச்சுத் திணற வைக்கும் யதார்த்தம். அதேபோல், நாம் மிகவும் இருண்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில் இருக்கலாம், ஆனால் விரக்தி நம்மை அவற்றை முடிவில்லாமல் சுழற்றச் செய்கிறது, அதே நேரத்தில் கிறிஸ்துவில் நம் நம்பிக்கையை மறைக்கிறது. கிறிஸ்தியானின் விடுதலை இருள் முடிந்ததால் அல்ல, மாறாக அவர் தனது சட்டைப் பையில் வாக்குறுதியின் திறவுகோலைப் பயன்படுத்த நினைவில் வைத்திருந்ததால்தான்.
தேவனுடைய வார்த்தை தொடர்ச்சியாக நமது எண்ணங்களை பாதித்து புதியாதக அவற்றை வடிவமைக்க வேண்டும். எப்பொழுது கைவிட்டப்பட்டதாக உணர்கிறோமோ அப்பொழுது நம்மை விட்டு விலகுவதில்லை, கைவிடுவதில்ல என்ற அவரது வாக்குத்தத்தத்தை நினைவில் கொள்ளவேண்டும். எப்பொழுது ஆழம் தேவனின் எல்லைக்கு அப்பாற் செல்வது போல தோன்றுகிறதோ அப்பொழுது தேவன் எல்லா ஆழங்களிலும் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று அறியாக நேரத்தில், ஆவியானவர் உங்களுக்கு பெருமூச்சோடு வேண்டுதல் செய்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சரீரத்தை பராமரியுங்கள்
எலியா சோர்வடைந்ததாக உணர்ந்தபோது, கடவுள் அவருக்கு உணவு, ஓய்வு மற்றும் அவரது பிரசன்னத்தை வழங்கினார். நாம் வரையறுக்கப்பட்ட திறன்களுடன் படைக்கப்பட்டுள்ளோம், அவை குறையும் போது மீட்டெடுக்கப்பட வேண்டும். எனவே, பணிவுக்கு தினசரி உடற்பயிற்சி, போதுமான தூக்கம், நம் உடலுக்கு ஊட்டமளித்தல், சூரிய ஒளியில் இருத்தல், மருத்துவ உதவியை நாடுதல் மற்றும் பொறுப்புகளைத் திணிப்பதற்குப் பதிலாக ஓய்வெடுக்க அனுமதித்தல் ஆகியவை தேவை. நமது உடல் தேவைகளைப் பூர்த்தி செய்வது முக்கியமற்றதாகவோ அல்லது பயனற்றதாகவோ தோன்றினாலும், அது உண்மையில் நமது படைப்பின் வரம்புகளை மதித்து கடவுளின் ஏற்பாட்டில் நம்பிக்கை வைப்பது ஒரு சக்திவாய்ந்த கீழ்ப்படிதல் செயலாகும்.
விசுவாசத்தின் தடுமாறும் படிகளில் விடாமுயற்சியுடன் இருங்கள். இந்த நேரத்தில் நீங்க செய்வதற்கு தேவன் உருவாக்கின நல்ல வேலை இதுதான்.
வெளிப்புறமாக திரும்புங்கள்
உயிர்வாழும் உள்ளுணர்வைப் போலவே, விரக்தி பாதிக்கப்பட்டவரின் ஒவ்வொரு பகுதியையும் உறிஞ்சி, சுய கவனத்தையும் தனிமைப்படுத்தலையும் ஏற்படுத்துகிறது. சிதைந்த சுயபரிசோதனையின் சக்திவாய்ந்த திருப்பத்தை, மற்றவர்களுடன் நேரம், கவனிப்பு மற்றும் அவர்களோடு இருப்பதன் மூலமும் குறைக்கலாம். அன்பைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல், உரையாடல் மற்றும் கவனத்தின் மூலமும் அதைக் கொடுப்பதன் மூலம் மற்றவர்களை உள்ளே அனுமதிப்பது நல்லது. இவ்வித அக்கறையின் சிறிய சிறிய செயல்கள் மற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து, சுய கவனத்தை நோக்கிய இழுவைக்கு எதிராக வலுவான எதிர் நடவடிக்கைகளாக செயல்படுகின்றன. உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்காக ஜெபியுங்கள், ஊக்கமளிக்கும் குறிப்பை அனுப்புங்கள், அவர்கள் மீது ஒரு உரையாடலை மையப்படுத்துங்கள் – இவை அனைத்தும் கடவுள் மற்றும் அண்டை வீட்டாரை நோக்கி வெளிப்புறமாகத் தோன்றும் தோரணையை மீட்டெடுப்பதற்கான விடுதலையான வழிகள்.
அன்றாட வழக்கத்தை மீட்டெடுத்தல்
நமது அன்றாட தேவைகளை எப்பொழுது விரக்தி பாதிக்கிறதோ, அவற்றை நமது மறுமீட்சியின் அத்தியாவசியங்களாக பார்க்கவேண்டும். நாள்தோறும் பழக்கவழக்கங்கள் அவைகள் எவ்வளவு சிறிதானதாக இருந்தாலும் அவற்றை தொடருங்கள். தினமும் காலையில் எழுந்திருத்தல், துணி துவைத்தல் அல்லது புல்வெளியை வெட்டுதல் போன்ற எளிய பணிகள் இயல்பு மற்றும் நோக்கத்தின் உயிர்நாடிகளாகின்றன. முயற்சிகள் இயந்திரத்தனமாகத் தோன்றினாலும், அடுத்ததைத் தழுவுவது நம்பிக்கையின் செயலாகும். சிறிய விஷயங்களில் விசுவாசம் (லூக்கா 16:10) நமது திறனை மீண்டும் உருவாக்குகிறது மற்றும் அர்த்தத்தையும் நோக்கத்தையும் உறுதிப்படுத்துகிறது மற்றும் சாதாரணமானவற்றை நாம் மீண்டும் மீட்சியடைய மாற்றுகிறது.
படைப்பின் ஆறுதல்
பயம் பெரிதாகத் தோன்றும்போது, கடவுளின் மகத்துவம் மற்றும் அவரது இறையாண்மையின் வெளிச்சத்தில் நமது சிறுமையை நினைவுகூருவது நமக்கு நிம்மதியைத் தருகிறது. அவர் நம்மையும் உட்பட அனைத்து படைப்புகளையும் ஒன்றாக வைத்திருக்கிறார். வானத்தில் ஓரியனின் பெல்ட்டிலிருந்து கடலின் வாயில்கள் வரை அனைத்தையும் நிலைநிறுத்துவதில் கடவுள் தனது குணத்தையும் இறையாண்மையையும் வெளிப்படுத்தியபோது அதைக் கண்ட யோபின் விரக்தி, ஆர்தனைக்கு மாறியது. இயற்கையில் நடப்பது, நட்சத்திரங்களுக்கு கீழ் படுத்துக் கொள்வது, பூக்களை நடுவது, விலங்குகளைப் பராமரிப்பது – படைப்பின் அழகு நம்மை ஆறுதல்படுத்துகிறது மற்றும் இயற்கை உலகில் அவர் நமக்கு கிரியை செய்யும்போது நமது பார்வையை அது மறுசீரமைக்கிறது.
பொறுமையுடன் விடாமுயற்சியுடன் இருங்கள்
இருள் நீடித்து, விடுதலை வராதபோது, துன்பத்திலிருந்து நம்பிக்கைக்கு முன்னேறுவதற்கு சகிப்புத்தன்மை தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது நேரத்தையும் நம்பிக்கையையும் குறிக்கிறது. பதற்றத்தில் வாழ்வது எளிதானது அல்ல, ஆனால் பலவீனமும் தேவையும் கிறிஸ்துவை முழுமையாகச் சார்ந்திருப்பதைக் கற்றுக்கொள்வதற்கு முன்நிபந்தனைகளாகும். அவர் நம்மை அவருடைய வெற்றி மற்றும் உயிர்த்தெழுதல் வல்லமையில் பங்கு கொள்ள மட்டுமல்ல, அவருடைய துன்பங்களின் ஐக்கியத்தின் பங்குபெறவும் அழைத்திருக்கிறார் ( பிலி. 3:10 ). விசுவாசத்தின் அந்தத் தடுமாறும் படிகளில் விடாமுயற்சியுடன் இருங்கள். இந்தப் காலத்தில் அவர் உங்களுக்காகத் உருவாக்கின நல்ல வேலை இது.
இருளுக்கு அஞ்சாதிருங்கள். அவை முடிவில்லாதவையாக உணர்ந்தாலும், உண்மை என்னவென்றால், “கிறிஸ்துவுக்குள் தம்முடைய நித்திய மகிமைக்கு உங்களை அழைத்த சகல கிருபையின் தேவன் தாமே உங்களை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்” ( 1 பேதுரு 5:10 ). இருள் இன்னும் ஆழமடையக்கூடும், ஆனால் இருளின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டு, குமாரனின் ராஜ்யத்திற்கு மாற்றப்பட்டவர்களை அவை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது (கொலோ.1:13 ).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


