How to Deal with Burnout in Ministry?
ஊழியத்தில் ஏற்படும் மனச்சோர்வை கையாளுவது எப்படி?
19-03-2026
How to Deal with Burnout in Ministry?
ஊழியத்தில் ஏற்படும் மனச்சோர்வை கையாளுவது எப்படி?
19-03-2026

குழந்தையின் இழப்பில் தேவனின் ஆறுதல் 

3-Things-to-Know-about-Enduring-Loss-

பரலோகத்தின் இந்த பக்கத்தில் பூமியில், சுகமும், செல்வமும் மற்றும் பூரண மகிழ்ச்சியும் கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்கப்படவில்லை. வீழ்ச்சியுற்ற இவ்வுலகில் வருத்தமான உண்மை என்னவென்றால், பல விதமான இழப்புகள் வழியாக நாம் செல்வோம்: நமது உடல்நிலை, வேலை, உறவு அல்லது இன்னும் அதிகமாக, நாம் நேசிக்கக் கூடிய ஒருவரின் இழப்பு ஆகியன. நாம் இந்த இழப்புகளை அனுபவிக்கும்போது, இழந்ததை விட மற்றவைகளை பார்ப்பது கடினமாக இருக்கும். அது நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் அளவுக்கு மாறிவிடுவதால், வேதத்தின் ஜீவனுள்ள சத்தியங்கள் உட்பட மற்ற அனைத்தும் நமது துக்கத்தால் விழுங்கப்பட்டுவிடும். என் மகள் லீலா, அவளுக்குப் பிறக்க வேண்டிய தேதிக்கு ஒரு வாரம் முன்பு, இறந்தே பிறந்தபோது நான் இதை அனுபவித்தேன். என் இழப்பின் கொடூரத்தின் மீதே நான் முழுவதுமாகக் கவனம் செலுத்தத் தொடங்கினேன்: நான் மிகவும் ஆசைப்பட்ட என் குழந்தை இறந்துவிட்டது; அவளுக்கு உணவளிக்கவோ, ஆடை அணிவிக்கவோ, அல்லது அவளைப் பராமரிக்கவோ எனக்கு வாய்ப்பு கிடைக்காது; என் மகன் பென், ஒரே பிள்ளையாகவே இருந்துவிட்டான்; நான் மீண்டும் மலட்டுத்தன்மைக்குள் தள்ளப்படக்கூடும்; என் மகள் ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாள்; இப்படியே, என் ஆத்துமாவின் கண்கள் ஒரு கொடூரமான யதார்த்தத்திலிருந்து அடுத்த யதார்த்தத்திற்கு நகர்ந்துகொண்டே இருந்தன. ஆனால், என் இழப்பையும் அதன் பல அடுக்குகளையும் நான் பார்த்தபோது, என் துக்கத்திற்கு ஆறுதலையும் என் இருளுக்கு ஒளியையும் கொண்டுவரக்கூடிய அந்த ஒருவரைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். கீர்த்தனை எழுத்தாளர் ஹெலன் லெம்மலுக்கு, நான் கிட்டத்தட்ட விரக்தியில் மூழ்கியிருந்தபோது அதிலிருந்து வெளியேறும் வழி தெரிந்திருந்தது:

உங்கள் கண்களை இயேசுவின் மீது திருப்புங்கள்,
அவருடைய அற்புதமான முகத்தை முழுமையாகப் பாருங்கள், அவருடைய மகிமை மற்றும் கிருபையின் ஒளியில், பூமிக்குரிய காரியங்கள் விசித்திரமாக மங்கிவிடும்.

நான் என் கண்களை இயேசுவின் பக்கம் திருப்பியபோது, அவருடைய ஒளி இருளை ஒளிரச் செய்ததால், என் பிள்ளையை இழந்த துயரம்கூட ஆச்சரியமாக மங்கிப்போனது. அவரை நோக்கி பார்த்தது என் வலியை மறக்கடிக்கவில்லை, ஆனால் அந்த வேதனையின் நடுவே அது எனக்கு அளவற்ற ஆறுதலைத் தந்தது.

கரிசனையுள்ள மீட்பர்

என் மகளை இழந்த துயரத்தில் நான் இயேசுவிடம் திரும்பியபோது, இரக்கம் நிறைந்த ஒரு இரட்சகரைக் கண்டேன். பலவிதமான இழப்புகளை அனுபவித்த, துன்புறும் மக்கள் மீது இயேசுவின் இதயம் எவ்வளவு கரிசனையாக இருந்தது என்பதை சுவிசேஷங்கள் பதிவு செய்கின்றன. இதற்கு மிக அழகான எடுத்துக்காட்டுகளில் ஒன்று, குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் தன்னைத் குணமாக்கும்படி இயேசுவிடம் மன்றாடியது. மாற்கு தனது நற்செய்தியில் இவ்வாறு பதிவு செய்கிறார்: “இயேசு மனமிரங்கி, தம் கையை நீட்டி அவனைத் தொட்டு, ‘எனக்கு சுத்தமுண்டு; நீ சுத்தமாகு’ என்றார்” ( மாற்கு 1:41 ). ஆசாரிய சட்டங்களின்படி ( லேவி. 13 ) இந்த மனிதன் தீட்டுள்ளவனாக இருந்தான், எனவே அவன் ஒரு ஒதுக்கப்பட்டவனாக நடத்தப்பட்டான்,மற்றவர்களிடமிருந்து உடல்ரீதியான தூரம் அவனை எப்போதும் பிரித்தது. ஆனால் இயேசு, மனமிரங்கி, அந்தப் பிரிவின் வெற்றிடத்தைக் கடந்து தம் கையை நீட்டி அவனைத் தொட்டார் . இந்த மனிதன் மற்றொருவரின் தொடுதலை உணர்ந்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? வீழ்ச்சியடைந்த உலகின் பாரத்தினாலும் நொறுங்குதலினாலும் வாழும் மக்களின் வாழ்க்கையை இயேசு தொட்டதற்கு நற்செய்திகள் நமக்கு பல உதாரணங்களைத் தருகின்றன. இரக்கத்துடன், ஒரே மகனை இழந்த தாயையும் ( லூக்கா 7:11–15 ), நோயுற்றவர்களையும் ( மத்தேயு 14:14 ), பசியுள்ளவர்களையும் ( மத்தேயு 15:32 ), பார்வையற்றவர்களையும் ( மத்தேயு 20:30–34 ), துன்புறுத்தப்பட்டவர்களையும், உதவியற்றவர்களையும் ( மத்தேயு 9:35–36 ) இயேசு தேடிச் சென்றார். இந்த நிகழ்வுகளை நாம் பார்க்கும்போது, துன்பப்படும் மக்கள் மீது உணர்வற்ற ஒரு இரட்சகரை நாம் காணவில்லை, மாறாக இரக்கத்துடன் நம்மை நோக்கி “தம் கையை நீட்டும்” ஒரு இரட்சகரையே காண்கிறோம்.

கண்ணீர்விடும் மீட்பர்

கிறிஸ்துவின் கனிவான இருதயத்தை இந்த வசனத்தை விட வேறெங்கும் நாம் அதிகமாக பார்ப்பதில்லை: “இயேசு கண்ணீர் விட்டார்” (யோவான் 11:35). தமது சிநேகிதனான லாசரு மரித்தபோது துக்க வீட்டுக்கு வந்தபோது, திரைப்படங்களில் வருவதுபோல் ஒற்றைக் கண்ணீரை கிறிஸ்து விடவில்லை மாறாக அவர் “அழுதார்”. தாம் லாசருவை மீண்டும் உயிர்ப்பிக்கப் போகிறோம் என்று அவர் அறிந்திருந்தபோதிலும், அவர் ஆழ்ந்த துக்கம் மற்றும் கோபம் ஆகிய உணர்ச்சிகளை உணர்ந்தார்.

பாவம், துன்பம், மற்றும் துயரம் நிறைந்த உலகில் அக்கறை காட்டி, மன்றாடி, ஜெயங்கொள்ளும் இரட்சகராகிய இயேசுவை நான் நோக்கியபோது, என் வாழ்விலும் மரணத்திலும் எனக்கு இருந்த ஒரே ஆறுதலைக் கண்டேன்.

லைலா பிறக்கும்போதே இறந்த பிறகு, நான் இதற்கு முன் அழுததை விட அதிகமாக அழுதேன். ஆனால், என் இரட்சகரும் மரணத்தைக் கண்டு அழுதார் என்ற உண்மை எனக்கு ஆறுதலளித்தது. ஜான் கால்வின் இவ்வாறு எழுதுகிறார், “நம்முடைய துன்பங்களால் அவர், தாமே அவற்றால் துன்பப்பட்டது போல மிகவும் கலங்குகிறார்.” உங்கள் இழப்பிலும், என்னுடைய இழப்பிலும், நம் ஆண்டவராகிய இயேசு நம்முடைய துக்கத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவதில்லை. அவரே மாம்சமான வார்த்தை; அவர் தம் மார்பில் துக்கத்தையும், கன்னங்களில் கண்ணீரையும் உணர்ந்தார்.

ஜெயங்கொள்ளும் மீட்பர்

இயேசு நம்மீது அக்கறை காட்டுகிறார், நமக்காக அழுகிறார் என்பதை அறிவது இழப்பின் காலங்களில் ஒரு ஆறுதலாகும், ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல. முடிவில் இவையெல்லாவற்றின்மீதும் கிறிஸ்துவால் வெற்றிசிறக்க முடியவில்லையென்றால் நமது பாடுகளிலும் உபத்திரவங்தளிலும் அவர் நம் பக்கம் இருப்பதால் என்ன பயன்? கிறிஸ்து ஜெயங்கொள்ளுகிறவராக இல்லையென்றால் நிச்சயமாக அவர் ஆறுதலளிப்பவராகவும் இருக்கமாட்டார். நாம் மிகுந்த மனவலியோடு இருக்கையில் நமக்கு வெறுமனே ஓர் கரிசனையாளர் மட்டுமல்ல நமக்கு ஓர் இரட்சகர் தேவை.

இயேசு நமது வலியை ஒரு தற்காலிகத் தீர்வால் மூட வரவில்லை; அவர் நமது எல்லாத் துன்பங்களுக்கும் மூல காரணமான பாவத்தைத் தீர்த்தார். வீழ்ச்சியின் சாபத்தை அவர் மாற்றியமைக்கும்படி, “அவரே நம்முடைய பாவங்களைத் தம்முடைய சரீரத்திலே சிலுவையின்மேல் சுமந்தார்” (பேதுரு 2:24 ). பாவம் எல்லாவற்றையும் கறைப்படுத்துவற்கு முன்பு இழப்பு ஏதும் அங்கு இல்லை. அழுகை இல்லை, ஏமாற்றம் இல்லை, மனமுறிவு இல்லை, மரணம் இல்லை. எப்பொழுது இயேசு லாசருவை மரணத்திலிருந்து ஜீவனுக்கு அழைத்தாரோ, இயேசு எதற்காக வந்தார் என்பதை அங்கு நமக்கு காண்பிக்கிறார்: “மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,”
(எபிரேயர் 2:14). கிறிஸ்து மரணத்தை ஜெயித்து மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்ததினால், இனி துன்பமும் அவமானமும் பறந்தோடுகிற மரணமும் இழப்பும் இல்லாத வரக்கூடிய நித்திய வாழ்வின் புதிய நம்பிக்கையை நமக்கு அளித்தார்.

ஆறுதலளிக்கும் மீட்பர்

லைலா என் கருவிலேயே இறந்துவிட்டாள் என்பதை நான் அறிந்தபோது, என்னை முற்றிலுமாக விழுங்கிவிடும் அளவுக்கு ஒரு பெரும் துயரத்தில் மூழ்கினேன். ஆனால், பாவம், துன்பம், மற்றும் துயரம் நிறைந்த உலகில் அக்கறை காட்டி, அழுது, ஜெயிக்கிற இரட்சகராகிய இயேசுவை நான் நோக்கியபோது, என் வாழ்விலும் மரணத்திலும் எனக்கு இருந்த ஒரே ஆறுதலைக் கண்டேன். நான் என் கண்களை அவரை நோக்கித் திருப்பியபோது, அவருடைய மகிமை மற்றும் கிருபையின் ஒளியில் என் இழப்பு விசித்திரமாக மங்கிப்போனது.

ஓ ஆத்துமாவே, நீ சோர்வும் கலக்கமும் அடைந்திருக்கிறாயா? இருளில் ஒளியைக் காணவில்லையா?
இரட்சகரை நோக்கிப்பார்ப்பதில் வெளிச்சம் உண்டு,
நிறைவானதும் சுதந்திரமானதுமான வாழ்வும் உண்டு.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஜேக்கி கிப்சன்
ஜேக்கி கிப்சன்
ஜாக்கி கிப்சன், பிலடெல்பியாவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியில் தனது கணவர் ஜொனாதனுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர் நான்கு பிள்ளைகளின் தாய் மற்றும் ' You Are Still a Mother: Hope for Women Grieving a Still Birth or Miscarriage' என்ற நூலின் ஆசிரியர் ஆவார் .