
நரகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்
27-02-2025
2 பேதுருவிலிருந்து அறிய வேண்டிய மூன்று அடிப்படை காரியங்கள்
06-03-2025வேதாகம அடிப்படையில் முடிவெடுப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 பிரதான காரியங்கள்

முடிவுகள், முடிவுகள், முடிவுகள். நாம் அனைவரும் ஒரே நாளில் பல முடிவுகளை எடுக்கிறோம். சில முடிவுகள் சாதாரணமானவை (வழக்கமானவை) என்பது உண்மைதான், ஆனால் பெரும்பாலான முடிவுகள் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையை பெரிதளவில் பாதிக்ககூடியவைகளாக அமைகின்றன. உதாரணமாக நான் எந்தக் கல்லூரியில் சேர வேண்டும்?, இந்த வேலை வாய்ப்பை நான் ஏற்றுக்கொள்ளலாமா?, என் வாழ்க்கை துணையாக யாரைத் தேர்ந்தெடுப்பது?. இவை அனைத்திலும், விசுவாசிகள் தேவனின் உதவியையும், வழிநடத்துதலையும் சார்ந்தே இருக்கிறார்கள் இருக்கவும் வேண்டும். வேதாகம அடிப்படையில் சரியான முடிவுகளை எடுப்பதில் ஒரு முழுமையான பட்டியல் நமக்கு இல்லாவிட்டாலும், ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் கருத்தில் கொள்ள வேண்டிய அடிப்படையான ஐந்து காரியங்களை இங்கே சிந்திப்போம்.
1. வேதாகம அடிப்படையில் முடிவெடுப்பது என்பது வேதத்ததை மையமாக கொண்டது.
சரியான சிந்தனையோடு ஆராய்வோமானால், நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய பலதரப்பட்ட ஒப்புமையான சத்தங்களில் வேதாகமமும் ஒரு சத்தம் அல்ல. ஆனால் நமது வாழ்வில் வேதம் மட்டுமே தவறிழைக்காத ஞானம், ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளை கொடுக்கிற ஒரே மூலதனமாகும். வேதாகமம் வெறும் அறிவுரைகளை தரும் புத்தகம் அல்ல; அது நம் தேவனுடைய சத்தமாயிருக்கிறது. அது அவரிடமிருந்து நேரடியாக நம்மோடு பேசும்படியாக தேவனாலே அருளப்பட்டதாகவும் இருக்கிறது (2 தீமோ. 3:16). அல்லது, வேறுவிதமாகச் சொன்னால், வேதாகமம் வெறும் தகவல்களை நமக்கு கொடுப்பதில்லை; அது நம்மோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது. நாம் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதில் வேதம் மட்டுமே நம்முடைய அன்பான பரமபிதாவினுடைய வழிகாட்டுதலை நமக்கு வெளிப்படுத்துகிறது. எனவே, வேதத்தை நேரடியாக மீறக்கூடிய எந்தவொரு நமது முடிவும் வேதாகமத்தை மட்டும் நிராகரிப்பதில்லை; அது நம்முடைய தேவனையே நிராகரிப்பதற்கு சமமாகும். இதனால் தவிர்க்கமுடியாத ஆபத்தான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.
2. வேதாகம அடிப்படையில் முடிவெடுப்பது என்பது ஜெபத்தோடு தொடர்புடையது.
வேதாகம அடிப்படையில் முடிவெடுப்பது என்பது ஒரு உறவுசார்ந்த ஒன்றாகும். தேவன் நமக்கு செவிகொடுக்கிறார், நம்மீது அக்கரையுள்ளவராய் இறக்கிறார் என்று மட்டுமல்ல, அவர் நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கிறவராயும் இறக்கிறார். நாம் வெறுமனே நம்மோடு தொடர்புகொள்ள முடியாத ஒரு புத்தகத்தை ஆராயவில்லை; வேதத்தின் மூலம் நம்மோடு தொடர்புகொள்ளக்கூடிய ஒரு வழிகாட்டியிடமிருந்து மேலான வழிகாட்டுதலைக் கேட்கிறோம். ஆதலால் வேதத்தை படிக்கும்போது, அதின் ஆசிரியரான தேவனோடு உறவு கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம். வேதாகமம் தேவனுடைய ஞானம் மற்றும் அவருடைய ஆலோசனையாயிருக்கிறது; எந்த தேவனுடைய பிள்ளைகளுக்காக இயேசு மரித்தாரோ, யாரை அவர் நேசித்து, புத்திரசுவிகாரத்தை கொடுத்தாரோ அவர்களுக்காகவே அதை எழுதியும் கொடுத்திருக்கிறார். நாம் அவரை வேதத்தில் தேடும்பொழுதெல்லாம் நமக்கு அதிலிருந்து பதில் கொடுப்பதில் அவர் மகிழ்ச்சி உள்ளவராயும் இருக்கிறார்.
உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தை கேட்கிற தன் மகனுக்குக் கல்லை கொடுப்பானோ? மீனைக் கேட்டால் அவனுக்கு பாம்பைக் கொடுப்பானோ?ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக்கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளை கொடுப்பது அதிக நிச்சயமல்லவா? ! (மத். 7:9–11)
3. வேதாகம அடிப்படையில் முடிவெடுப்பது என்பது வேதாகம ஆலோசனையை சார்ந்தது.
மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு ஞானமான முடிவுகளை எடுப்பதை வேதாகமம் பெரும்பாலும் ஊக்குவிக்கிறது.. “ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்” (நீதி. 20:18). “ஆலோசனையை கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு” (நீதி. 13:10). நிச்சயமாக, நம்மை நன்கு அறிந்த தேவபக்தியுள்ள ,முதிர்ந்த, வேதாகம அறிவுள்ள பிற கிறிஸ்தவராக அவர்கள் காணப்படுவது அவசியம். நமது முடிவை உறுதிப்படுத்தக்கூடிய அல்லது வரவிருக்கும் ஆபத்துகளை எச்சரித்து, சவால்கள் அல்லது நாம் நினைத்து பார்க்காத இருளான வழிகளை குறித்து நம்மை எச்சரிக்கக்கூடியவர்களுடன் கலந்தாலோசிப்பதில் பெரும்நன்மை நமக்கு இருக்கிறது. நாம் ஆலோசிப்பவர்கள் முதிர்ச்சியற்றவர்களாகவோ அல்லது கிறிஸ்தவரல்லாத நண்பர்களாகவோ இருக்கும்போது நாம் தவறான பாதையல் செல்லக்கூடும். அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் நாம் விரும்புவதையே சொல்கிறவர்களாய் இருப்பார்கள். எனவே, “துன்மார்க்கரின் ஆலோசனைகள் வஞ்சகமானவைகள்” (நீதி. 12:5) என்பதால், “வேதாகம ஆலோசனையையே” நாம் நமது வாழ்வில் பிரதானப்படுத்தி முடிவெடுக்க வேண்டும்.
4. வேதாகம அடிப்படையில் முடிவெடுப்பது என்பது தெய்வீக பராமரிப்பின் செயலை சார்ந்தது.
வேதாகம முடிவெடுப்பது, சர்வ வல்லமையுள்ள தேவன் தனது இறையாண்மையில் என்ன செய்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்கிறது. தேவன் “அவரது அனைத்து படைப்புகளையும், அவற்றின் அனைத்து செயல்களையும் தமது சர்வ ஏகாதிபத்தியத்தினால் பாதுகாத்து நிர்வகிக்கிறார்” (வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை 11ம் அதிகாரம்). வேதாகம முடிவெடுப்பதில் கடவுளின் விருப்பத்தைத் தீர்மானிப்பதற்கான ஒரே காரணி இது மட்டுமல்ல. இருப்பினும், கடவுள் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கும் விதமாக நமக்கு வாய்ப்புகளைத் தமது பராமரிப்பின் மூலம் தரமுடியும் அல்லது நாம் முன்பு கருத்தில் கொள்ளாத வகையில் அவரது தெய்வீக வழிநடத்துதல் நம்மை சிறப்பாக வழிநடத்த முடியும். தேவனின் வழிகாட்டுதலுக்காக விசுவாசத்தில் நாம் அவரை நோக்கிப் பார்க்கும்போது, தேவ ஜனங்கள் அவர் தெய்வீக பராமரிப்பின் செயலின் மூலம் நம்மை வழிநடத்துவார் என்று அவர்மீது நம்பிக்கை கொள்ளலாம்.
5. இறுதியாக வேதாகம அடிப்படையில் முடிவெடுப்பது என்பது தேவனால் கொடுக்கப்பட்ட மற்றும் வேதம் ஒப்புதல் அளித்த முழுமையான வழிமுறைகளின் கலவையாகும்.
நல்லெண்ணம் கொண்ட கிறிஸ்தவர்கள் கூட வேதாகம முடிவுகளை எடுக்கும் வழிகளில் ஒன்று, மேற்சொல்லிய வழிமுறைகளின் ஒரு அம்சத்தைப் பயன்படுத்தி மற்ற அனைத்தையும் விலக்குவதாகும். பொதுவாக இன்றைய நாட்களில் கடவுளின் சித்தத்தைக் கண்டுபிடிப்பதற்காக மக்கள் தவறாக நம்பும் இரண்டுகாரியங்கள்- “ஒற்றை வழிமுறை” தீர்வுகளை பற்றிக் கொள்வது. உதாரணமாக (1) நாம் கடவுளின் பராமரிப்பின் காரியங்களில் தவறில்லாத விளக்கவுரையாளர்கள் என்று நம்மைநாமே நினைப்பது (“நான் இந்த அடையாளத்தைக் கண்டேன்” அல்லது “எனக்கு இந்த கனவு இருந்தது”) மற்றும் (2) நமது உணர்வுகளை மட்டும் முற்றிலும் சார்ந்து இருப்பது. (“தேவனின் பராமரிப்பினால் நான் செய்ய விரும்புவது இதுதான் என்று உறுதியாக நான் உணர்கிறேன்”). இவற்றில் ஒன்றை மட்டும் சார்ந்திருந்து மற்ற அனைத்தையும் தவிர்த்து நாம் முடிவு எடுக்கும்போது, எடுக்கப்படும் முடிவு சமநிலையற்றதாக உறுதியற்றதாக இருக்கும். நமது முடிவெடுப்பதில் நமக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்ததில், தேவன் தம்முடைய வேதவார்த்தைகளின் ஆலோசனைகள் அனைத்தையும் ஒன்றாகப் பயன்படுத்தக் கொடுத்துள்ளார். அதில் ஒரு வழிமுறையை மட்டும் நாம் சார்ந்திருப்பது என்பது ஆபத்தான ஒன்று.நமது வேதாகம முடிவெடுப்பதில் நமக்கு இருக்கும் அமைதியும் நம்பிக்கையும் என்னவென்றால், கடவுள் நம்மை நேசிக்கிறார், மேலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் எப்போதும் தனது இறையாண்மையுள்ள உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றுவார். நாம் “குழப்பம்” செய்தாலும் – நிச்சயமாக நமது முடிவெடுப்பதில் சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகள் இருந்தாலும் நாமே அதற்கு முழுமையான பொறுப்பாளிகள். – தேவன் நம் நன்மைக்காகவும் அவருடைய மகிமைக்காகவும், நமது எல்லா பாவங்களாலும் தவறுகளாலும் நம் வாழ்க்கையை வல்லமைகொண்டு மேற்பார்வையிடுவார். பதட்டமான மற்றும் பயங்களின் ஊளையிடும் காற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் அமைதியும் ஆறுதலும் என்னவென்றால், அவர் இன்னும் சர்வவல்லமையுள்ள கடவுளாக இருந்து எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறார், அவர் தம்முடைய இறையாண்மையின்படி, அவரை நேசிப்பவர்களுக்கும் அவருடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் நன்மைக்காக எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து செயல்படச் செய்கிறார் என்பதே (ரோமர் 8:28).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.