எங்களுடைய விசுவாச அறிக்கை

லிகோனியர் ஊழியங்கள் பண்டைய விசுவாச  அறிக்கைகளை கடைபிடிக்கின்றன(அப்போஸ்தல விசுவாச பிரமாணம், நிசயா விசுவாச பிரமாணம் மற்றும், Creed of Chalcedon) மற்றும் சீர்திருத்தத்தின் ஐந்து சோலாக்கள் மற்றும் வரலாற்று சீர்திருத்த விசுவாச  அறிக்கைகளின் ஒருமித்த கருத்து ஆகியவற்றில் வெளிப்படுத்தப்பட்ட வரலாற்று கிறிஸ்தவ நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. (Westminster Standards, Three Forms of Unity, and 1689 London Baptist Confession of Faith).

பரிசுத்த வேதாகமம்

வேதம், முழுவதுமாக தவறில்லாத, பிழையற்ற மற்றும் தேவ ஆவியால் ஏவப்பட்ட கடவுளின் வார்த்தை; இது தெய்வீக வெளிப்பாடாகும், இது கடவுளின் அதிகாரத்தின் முழு எடையையும் கொண்டுள்ளது மற்றும் அதற்கு நாம் அடிபணியக் கடமைப்பட்டுள்ளோம்.

பரிசுத்த திரித்துவம் 

தெய்வதுவத்தில் ஒற்றுமையும் அதேவேளையில் மூன்று தனி தெய்வீக நபர்களாக பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், மற்றும் பரிசுத்த ஆவியாகிய தேவனாக இருக்கிறார்கள். இந்த மூன்று நபர்களும் ஒரே உண்மையான நித்திய தேவன், தங்களுடைய சாராம்சத்திலும், வல்லமையிலும் மகிமையிலும் சரிசமமானவர்கள். 

கடவுள் 

கடவுள் ஆவியாக, முடிவற்றவராக, மாறாத தன்மையுடையவராய், ஞானம், வல்லமை, பரிசுத்தம் நீதி, நன்மை மற்றும் சத்தியமுள்ளவர். அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் எங்குமிருப்பவர், யாரிடமிருந்து எதையும் தெரிந்துக்கொள்ள அவசியமற்றவர். 

இயேசு கிறிஸ்து 

இயேசு கிறிஸ்து உண்மையான கடவுளாகவும், உண்மையான மனிதனாகவும்  பிரிக்கமுடியாத இரண்டு தெய்வீக தன்மையை கொண்டு எந்தவொரு குழப்பமுமில்லாமல் பிரிவுமில்லாமல் ஒரே தெய்வீக நபராக இருக்கிறார். ஒவ்வொரு தன்மையும் தனக்கு சொந்த பண்புகளைக் கொண்டிருக்கிறது. அவருடைய மானுட அவதாரத்தில் இயேசு கிறிஸ்து கன்னி மரியாளிடத்தில் பிறந்து, நீதியான வாழ்வை நம்மோடு வாழ்ந்து, பாடுபட்டு சிலுவையில் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு முன்றாம் நாள் உயிர்தெழுந்து பரமேறி, இரண்டாம் முறை மகிமையாக வந்து பூமியை நியாந்தீர்க்க போகிறார். தேவனுக்கும் மனிதனுக்குமான ஒரே மத்தியஸ்தர் அவர் ஒருவரே. 

பரிசுத்த ஆவியானவர் 

பரிசுத்த ஆவியானவர் பிதாவாகிய தேவனை போலவும், குமாரனாகிய தேவனை போலவும் தேவன். அவர் நித்தியத்திலிருந்து பிதாவினாலும், குமாரனினாலும் ஜெநிபிக்கப்பட்டவர்.அவர் விசுவாசிகளின் இருதயத்தில் வாசம்பன்னுகிறார். மறுபிறப்பில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, பரிசுத்தமாகுதலில் விசுவாசியோடு இணைந்து செயல்படுகிறார். 

படைப்பு 

தேவன் தனது வார்த்தையின் வல்லமையினால் ஒன்றுமில்லாமையில் இருந்து வானத்தையும், பூமியையும் படைத்தார். அவருடைய பரிசுத்த ஞானமான வல்லமையினால் தனது அனைத்து படைப்பையும் பாதுகாத்து, ஆளுகைசெய்து பாராமரிக்கிறார். 

மனிதன்

தேவன் மற்ற அனைத்தையும் படைத்து முடித்த பின் மனிதனை ஆணும், பெண்ணுமாக தேவ சாயலில் படைத்தார், ஆனால் ஆதாம் பாவம் செய்து வீழ்ந்துபோய் ஆசீர்வாதத்தை இழந்து தன்னை கெடுத்து ஆவிக்குரிய ரீதியில் செத்துபோய் படைத்த தேவனின் உறவை இழந்தான், அதன் பாவத்தின் விளைவு  மரணம்.

பரிகார பலி

மனிதன் எல்லாரும் பாவத்தில்  வீழ்ச்சியுற்றதினால், பரிகார பலியின் மூலமாக தேவனோடு ஒப்புரவாகுதல் அவசியமானது. இயேசு கிறிஸ்து சிலுவையில் பதிலால் பரிகார பலியை தனது ஜனங்களுக்காக செய்து முடித்தார். விசுவாசிக்கிற அனைவருக்கும் அவருடைய நீதியை உட்புகுத்தி, தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்புகிறவர்களுக்கு தனது மீட்பின் முழு பாதுகாப்பையும் கொடுத்து விசுவாசத்தின் மூலமாக மட்டுமே இரட்சிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 

நியாயபிரமாணம் 

ஒழுக்கச் சட்டம் தேவனுடைய மாறாத குணாதிசயத்தை பூரணமாக வெளிப்படுத்தி, எல்லா மக்களையும் அதாவது விசுவாசியையும், அவிசுவாசியையும் இணைக்கிறது 

திருச்சபை

கிறிஸ்து ஒரு காணக்கூடிய திருச்சபையை நிறுவியுள்ளார், இது பரிசுத்த வேதாகமத்தின் அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பரிசுத்த ஆவியின் வல்லமையில் வாழ அழைக்கப்பட்டது, கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறது, திருநியமங்களை நிர்வகிப்பது மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறது.

கிறிஸ்தவம் மற்றும் கலாச்சாரம் 

லிகோனியர் கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பணியை ஆதரிக்கிறார், இது வேதத்தின் முழுமையான அதிகாரத்தையும் இயேசு கிறிஸ்துவின் இறையாட்சியையும் ஒப்புக்கொள்கிறது, மேலும் மனிதன் மற்றும் அவனது சுற்றுச்சூழலின் நல்வாழ்வுக்கான கடவுளின் கட்டளைகளின் சமூக மற்றும் கலாச்சார தாக்கங்களை செயல்படுத்த உறுதிபூண்டுள்ளது. லிகோனியர் குறிப்பாக பாதுகாப்பற்ற சிசு வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் கொலையைக் கண்டிக்கும் மற்றும் பாலினம், பாலியல் மற்றும் திருமணம் பற்றிய வேதத்திற்கு எதிரான  வரையறைகளை கொண்ட அமைப்புகளுக்கு எதிரானது.

கிறிஸ்துயியல் பற்றிய லிகோனியர் அறிக்கையையும் பார்க்கவும்